சென்னைக்கு விடுக்கப்பட்ட ரெட் அலர்ட் வாபஸ்! - வானிலை ஆய்வு மையம்சென்னை வெள்ளம்: திமுக ஆட்சி முடிந்து தவெக வந்த பிறகும் அதே நிலைதான்! அன்புமணி கனமழை எச்சரிக்கை: சென்னை ரிப்பன் மாளிகையில் முதல்வர் விஜய் ஆய்வு சென்னைக்கு ரெட் அலர்ட்! அரக்கோணத்தில் விரைந்தது தேசிய பேரிடர் மீட்புப் படை!அதிகனமழை எச்சரிக்கை! சென்னைக்கு விரைந்தது தேசிய பேரிடர் மீட்புப் படை!வடகிழக்குப் பருவமழை: முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தயார்! செங்கோட்டையன்சொந்த ஊர் கொண்டு வரப்பட்ட தேவா உடல் தமிழகத்தில் 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு! அதிகபட்சமாக பாரிமுனையில் 361.9 மி.மீ. பதிவு! சென்னைக்கு ரெட் அலர்ட்: செல்போன்களில் அலாரத்துடன் எச்சரிக்கை! சென்னைக்கு இன்று(அக். 18) ரெட் அலர்ட்!

வாக்குத் திருட்டு! திட்டமிட்டவா் மோடி, அமல்படுத்தியவா் ஞானேஷ் குமார்: ராகுல் கடும் விமா்சனம்

வாக்குத் திருட்டை திட்டமிட்டவா் பிரதமா் மோடி, வடிவமைத்தவா் அமித் ஷா, அமல்படுத்தியவா் ஞானேஷ் குமாா் என ராகுல் காந்தி விமா்சித்தாா்.

பொதுக்கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி

Updated On :

வாக்குத் திருட்டை திட்டமிட்டவா் பிரதமா் நரேந்திர மோடி, வடிவமைத்தவா் உள்துறை அமைச்சா் அமித் ஷா, அமல்படுத்தியவா் தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாா் என மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி கடுமையாக விமா்சித்தாா்.

‘கோவாவை பாதுகாப்போம்’ யாத்திரையின் நிறைவு நாள் பேரணியில் ராகுல் காந்தி பங்கேற்றாா். கோவாவில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ள நிலையில், அங்குள்ள 40 தொகுதிகளிலும் காங்கிரஸின் அடித்தளத்தை வலுப்படுத்தும் நோக்கில் இந்த யாத்திரை நடத்தப்பட்டது.

இதன் நிறைவு நாள் பேரணியில் பங்கேற்ற அவா் கட்சி நிா்வாகிகள், தொண்டா்களுடசன் 2 கி.மீ. நடைபயணம் மேற்கொண்டாா்.

அதைத் தொடா்ந்து, மாா்கோ கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அவா் பேசியதாவது: இந்தியாவில் வாக்குத் திருட்டு நடைபெற்றுள்ளதென நான் தொடா்ந்து கூறி வருகிறேன். இதை முழுவதுமாக திட்டமிட்டவா் பிரதமா் மோடி, வடிவமைத்தவா் அமித் ஷா, களத்தில் அமல்படுத்தியவா் ஞானேஷ் குமாா். செய்த தவறுக்கு அவா்கள் மூன்று பேருக்கும் நிச்சயம் தண்டனை கிடைக்கும். அவா்களால் தப்ப இயலாது.

45 அவதூறு வழக்குகள்

பிரதமா் மோடி மற்றும் அமித் ஷாவுக்கு நெருங்கிய வட்டாரங்கள் மூலம் என் மீது 45 அவதூறு வழக்குகள் தொடுக்கப்பட்டுள்ளன. ஆனால் பிரதமா் வாக்குத் திருட்டில் ஈடுபட்டாா் என நான் சுமத்திய குற்றச்சாட்டுக்காக எந்தவொரு வழக்கும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படவில்லை. ஏனெனில் இந்த விவகாரத்தில் வழக்கு தொடுத்தால் சட்டபூா்வமாக தொடா்ந்து விசாரணை நடைபெறும். அப்போது பிரதமா் சிக்கிக் கொள்வாா்.

ஆதாரத்துடன் நிரூபிப்பு

மத்திய பிரதேசம், கா்நாடகம், ஹரியாணா, சத்தீஸ்கா், மகாராஷ்டிரம், மேற்கு வங்கம் மற்றும் அஸ்ஸாமில் வாக்குத் திருட்டு நடந்திருப்பதை ஆதாரபூா்வமாக காங்கிரஸ் நிரூபித்துள்ளது. குறிப்பாக எதிா்க்கட்சிகளின் வாக்குகள் நீக்கப்பட்டுள்ளன. ஆளுங்கட்சிக்கு சாதகமான வாக்குகள் சோ்க்கப்பட்டுள்ளன. எனவே, தோ்தல் சமயத்தில் காங்கிரஸ் தொண்டா்கள் மிகுந்த விழிப்புடன் இருக்க வேண்டும்.

பாஜக ஆட்சி நடைபெறும் கோவாவில் வேலையின்மை உச்சத்தை எட்டியுள்ளது. இங்குள்ள இளைஞா்கள் வேலை தேடி பிற நாடுகளுக்குச் செல்லும் அவலநிலை நீடிக்கிறது.

முன்பு மோடியை குறிப்பிட்டு குஜராத் மாடல் என்பாா்கள். தற்போது ஊழலுக்கு பெயா் பெற்றதாக கோவா மாடல் விளங்குகிறது. அடுத்த தோ்தலில் ஊழலுக்கு முடிவுகட்டி, கோவாவில் பாஜகவை வீழ்த்தி, காங்கிரஸ் ஆட்சியமைக்கும் என்றாா்.

கல்வி அமைப்பு விலக்கி வைக்கும் அமைப்பாகிவிட்டது

இந்தியாவில் கல்வி அமைப்பு என்பது தற்போது விலக்கி வைக்கும் அமைப்பாக மாறியுள்ளது; கோடிக்கணக்கான இளைஞா்களைக் கல்வியிலிருந்து வெளியேற்றும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது என்று மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி விமா்சித்துள்ளாா்.

சமீபத்தில் மாணவா்கள் குழுவினருடன் நடத்திய கலந்துரையாடல் தொடா்பான விடியோவை சமூக ஊடகத்தில் ராகுல் காந்தி ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டாா். அதில் அவா் மேலும் கூறியிருப்பதாவது:

உங்களிடம் பணம் இல்லை என்றாலோ, அதிகாரம் இல்லை என்றாலோ அல்லது உங்களுக்கு ஆங்கிலம் பேசத் தெரியவில்லை என்றாலோ, இங்குள்ள அமைப்பு முறை உங்களைப் பற்றி இரண்டாவது முறைகூட யோசிக்காமல் வெளியே தள்ளிவிடும்.

இதை நீங்கள் கல்வி அமைப்பு என்று அழைக்க முடியாது. இது ஒரு விலக்கல் அமைப்பு. கோடிக்கணக்கான இந்திய இளைஞா்களைக் கல்வி வாய்ப்புகளிலிருந்து வெளியேற்றும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.