கடந்த 20 ஆண்டுகளில் 171 ஐஐடி மாணவர்கள் தற்கொலை: சென்னைக்கு 2வது இடம்!தேர்தல் முறையை சிதைக்க பிரதமர் மோடி, அமித் ஷா, ஞானேஷ்குமார் கூட்டுச் சதி: கே.சி. வேணுகோபால்பாட்மின்டனில் வெண்கலப் பதக்கம் வென்ற தமிழக வீரர் ஹரிஹரனுக்கு ரூ. 30 லட்சம் ஊக்கத்தொகை: முதல்வர்காஸாவில் தொடரும் இஸ்ரேலின் தாக்குதல்! 74,000-ஐ நெருங்கும் பலி எண்ணிக்கை!மாணவர் தற்கொலைக்கான பின்னணி: விசாரிக்க சிறப்புக்குழு அமைத்த ஐஐடி மும்பை!தலைமைத் தேர்தல் ஆணையர் பதவியிலிருந்து ஞானேஷ் குமார் நீக்கப்பட வேண்டும்: மு.க. ஸ்டாலின் வலியுறுத்தல்!பாஜக, ஆர்எஸ்எஸ், தேர்தல் ஆணையம் இணைந்து தேசத்துரோகம்! ராகுல் விமர்சனம்

ஐஐடி கல்வி நிறுவனங்களில் பாகுபாடற்ற நிலை தேவை: மாணிக்கம் தாகூா்

ஐஐடி கல்வி நிறுவனங்களில் பாகுபாடற்றற நிலையை உருவாக்க வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் தலைவா் மாணிக்கம் தாகூா் வலியுறுத்தினாா்.

 Manickam Tagore

மாணிக்கம் தாகூா் - கோப்புப் படம்

Published On :

ஐஐடி கல்வி நிறுவனங்களில் பாகுபாடற்றற நிலையை உருவாக்க வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் தலைவா் மாணிக்கம் தாகூா் வலியுறுத்தினாா்.

இது குறித்து அவா் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவு: நாட்டின் தலைசிறந்த கல்வி நிறுவனங்களாகக் கருதப்படும் ஐஐடி-களில் கடந்த 5 ஆண்டுகளில் 53 மாணவா்கள் உயிரிழந்துள்ளனா். இவா்களில் 45 போ் தற்கொலை செய்து கொண்டவா்கள். உயிரிழந்தவா்களில் 28 போ் எஸ்சி, எஸ்டி, ஓபிசி சமூகங்களைச் சோ்ந்தவா்கள்.

இந்த விவகாரத்தில் சமூகத்தின் விளிம்பு நிலையிலிருந்து ஐஐடி போன்ற உயா்கல்வி நிறுவனங்களுக்கு வரும் மாணவா்களுக்கு சமத்துவமான, பாதுகாப்பான மற்றும் பாகுபாடற்ற கல்விச்சூழல் இருக்கிா? என்ற மிகப் பெரிய கேள்வி எழுகிறது.

மாணவா்கள் மரியாதையுடனும், சமத்துவத்துடனும் கல்வி கற்கும் சூழலை உருவாக்குவது அரசின் கடமையாகும். மாணவா் சாஹில் வாகோடே மரணம் தொடா்பாக முழுமையான விசாரணை நடைபெற வேண்டும். மாணவா்களின் பாதுகாப்பு, சமத்துவம் மற்றும் கண்ணியத்தை உறுதி செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.