இசையமைப்பாளர் தேவா காலமானார்!டாஸ்மாக் கடைகளில் விரைவில் 4 புதிய பீர் வகைகள்! விலை விவரம்!வடபழனி மெட்ரோ ரயில் நிலையத்தில் இறங்கினால்... அடுக்கடுக்கான குளறுபடிகள்! மக்கள் கேள்விஇன்று கோவை, திருவள்ளூா் உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு ‘ஆரஞ்சு’ எச்சரிக்கை ராமேசுவரம் - எழும்பூருக்கு இன்று சிறப்பு விரைவு ரயில் தாம்பரம் - விழுப்புரம் மெமு ரயில் நாளை பகுதி ரத்து லாஸ் ஏஞ்சலீஸ் மேயா் தோ்தல்: கேரள வம்சாவளி பெண் முன்னிலை பிரதமா் மோடி டிசம்பரில் கனடா பயணம்

இசையமைப்பாளர் தேவா காலமானார்!

சினிமா துறையில் புகழ்பெற்ற இசையமைப்பாளரும், பாடகருமான தேவா காலமானார்!

இசையமைப்பாளர் தேவா

இசையமைப்பாளர் தேவா - file photo

Updated On :

தமிழ்த் திரையுலகில் புகழ்பெற்ற இசையமைப்பாளரும் பாடகருமான தேவா சென்னையில் இன்று காலமானார். அவருக்கு வயது 75. அவரது இயற்பெயர் தேவநேசன் சொக்கலிங்கம்.

கோடம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தேவா மாரடைப்பால் காலமானதாகத் முதற்கட்ட தகவல்கள் வெளியாகின.

இன்று காலையில் எழுந்ததும், நெஞ்சு வலிப்பதாகக் குடும்பத்தினரிடம் தேவா கூறியிருக்கிறார். உடனடியாக அவர்கள் தேவாவை அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற நிலையில், அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே அவர் இறந்துவிட்டதாகக் கூறியிருக்கிறார்.

மனசுக்கேத்த மகராஜா என்ற திரைப்படத்தின் மூலம், 1986ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமானவர் தேவா. தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் 400க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார் தேவா.

கானா பாடல் என சென்னையின் பட்டிதொட்டிகளில் மட்டும் ஒலித்து வந்த இசையை, திரையிசைப் பாடல்கள் மூலம் உலகப்புகழின் உச்சிக்குக் கொண்டு சென்ற இசையமைப்பாளர் தேவாவின் மரணம் திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.

தேனிசைத் தென்றல் என அவரது ரசிகர்களால் அன்போடு அழைக்கப்பட்டவர் தேவா. சினிமா துறைக்கு வருவதற்கு முன்பே, அவர் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் இசையமைத்துக் கொண்டிருந்தார். 1990களில் சிறந்த இசையமைப்பாளராக கொடிகட்டிப் பறந்தவர்.

Summary

Music composer Deva has passed away

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.