நம் இதயங்களில்... தேவா மறைவுக்கு மம்மூட்டி இரங்கல்!
நடிகர் மம்மூட்டி இரங்கல் பதிவு குறித்து...

இசையமைப்பாளர் தேவா
இசையமைப்பாளர் தேவா மறைவுக்கு நடிகர் மம்மூட்டி இரங்கல் தெரிவித்துள்ளார்.
இசையமைப்பாளர் தேவா மாரடைப்பு காரணமாக இன்று சென்னையில் உயிரிழந்தார். இவரது திடீர் மறைவுக்குப் பலரும் அஞ்சலி, இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர். நடிகர் ரஜினிகாந்த் உள்பட பல பிரபலங்கள் நேரில் சென்று தேவா குடும்பத்தினருக்கு இரங்கல்களைத் தெரிவித்தனர்.
தேவாவின் உடல் நாளை (அக். 18) ஆற்காடு அருகே அவரது சொந்த ஊரான சக்கரமல்லூர் கிராமத்தில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.
இந்த நிலையில், நடிகர் மம்மூட்டி பதிவொன்றை வெளியிட்டுள்ளார். இதில், “தேவாவின் மறைவுச் செய்தி கேட்டு மிகுந்த துயரமடைந்தேன். அவரது குடும்பத்தினருக்கும் அன்புக்குரியவர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது இசையும் இசைப்பயணமும் நம் இதயங்களில் என்றென்றும் நிலைத்திருக்கும்” எனத் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


