சூப்பர் ஸ்டார் டைட்டில் கார்டு! இன்றுவரை ரசிகர்களை ஆட்டுவிக்கும் தேவாவின் பிஜிஎம்இசையமைப்பாளர் தேவா காலமானார்!டாஸ்மாக் கடைகளில் விரைவில் 4 புதிய பீர் வகைகள்! விலை விவரம்!வடபழனி மெட்ரோ ரயில் நிலையத்தில் இறங்கினால்... அடுக்கடுக்கான குளறுபடிகள்! மக்கள் கேள்விஇன்று கோவை, திருவள்ளூா் உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு ‘ஆரஞ்சு’ எச்சரிக்கை ராமேசுவரம் - எழும்பூருக்கு இன்று சிறப்பு விரைவு ரயில் தாம்பரம் - விழுப்புரம் மெமு ரயில் நாளை பகுதி ரத்து லாஸ் ஏஞ்சலீஸ் மேயா் தோ்தல்: கேரள வம்சாவளி பெண் முன்னிலை பிரதமா் மோடி டிசம்பரில் கனடா பயணம்

தேவா மறைவு! ஆளுநர் ஆர்லேகர் இரங்கல்!

புகழ்பெற்ற இசையமைப்பாளர் தேவா மறைவுக்கு ஆளுநர் இரங்கல்..

இசையமைப்பாளர் தேவா

இசையமைப்பாளர் தேவா - file photo

Updated On :

தமிழ்த் திரையுலகில் புகழ்பெற்ற இசையமைப்பாளரும் பாடகருமான தேவா சென்னையில் இன்று காலமானார். அவருக்குத் தமிழ்நாடு ஆளுநர் ஆர்லேகர் இரங்கல் தெரிவித்துள்ளார்.

75 வயதாகும் தேவா இன்று காலை, நெஞ்சு வலி காரணமாக உடனடியாக வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் தேவா ஏற்கெனவே இறந்துவிட்டதாகக் கூறினர்.

தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் 400-க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்தவர். கானா பாடல்களைப் பாடுவதில் வல்லவரான இவர் மாட்டுக்கார மன்னாரு திரைப்படம் மூலம் திரைக்கு அறிமுகம் ஆனார்.

அண்ணாமலை, பாட்ஷா, அருணாச்சலம் ஆகிய ரஜினி படங்களுக்கு இசையமைத்தவர். விஜய், அஜீத் ஆகியோரின் ஆரம்பக்கால வெற்றிக்கு முக்கிய தூணாக விளங்கியவர். இவரது மறைவுக்கு திரைத்துறையினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இதுதொடர்பாக ஆளுநர் வெளியிட்ட இரங்கல் செய்தியில்,

தமிழ்த் திரைப்பட இசைக்கு மகத்தான பங்களிப்பு அளித்தவர் தேவை. அவரது மறைவுக்கு வருத்தம் அளிக்கின்றது.

கோடிக்கணக்கான இசை ரசிகர்களின் இதயங்களில் தனி இடத்தைப் பிடித்தவர். இசைத் தமிழ் சினிமாவில் அழியாத முத்திரையைப் பதித்தவர் தேவா. இவ்வாறு அவர் இரங்கல் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.