தமிழ் இசையின் ஆன்மாவோடு பிணைந்த... ஏ. ஆர். ரஹ்மான் இரங்கல்!

தேவா மறைவுக்கு ஏ. ஆர். ரஹ்மான் இரங்கல்...

இசையமைப்பாளர்கள் தேவா, ஏ. ஆர். ரஹ்மான்

Updated On :

இசையமைப்பாளர் தேவாவின் மறைவுக்கு ஏ. ஆர். ரஹ்மான் இரங்கல் தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவர் தேவா. ரசிகர்களால் தேனிசைத் தென்றல் தேவா என அன்புடன் அழைக்கப்பட்டவர். இளையராஜா, ஏ. ஆர். ரஹ்மான் ஆகியோரின் ஆதிக்கம் இருந்த போது தனக்கான தனித்துவமான இசையமைப்பின் மூலம் ரசிகர்களிடம் அதிகம் சென்றடைந்தார். தேவாவின் கானா பாடல்களுக்கு எல்லா தலைமுறையிலும் ரசிகர்கள் இருக்கின்றனர்.

இந்த நிலையில், மாரடைப்பு காரணமாக தேவா இன்று உயிரிழந்தார். இவரது திடீர் மறைவுக்குப் பலரும் அஞ்சலி, இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர். தற்போது, இசையமைப்பாளர் ஏ. ஆர். ரஹ்மான் இரங்கல் பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.

இதில், “நமது அன்பிற்குரிய ‘தேனிசைத் தென்றல்’ தேவா ஐயாவின் மறைவு மிகுந்த துயரத்தை அளிக்கிறது. தமிழ் இசையின் ஆன்மாவோடு பிணைந்த அவரது மெல்லிசைகள், பல தலைமுறையினரின் இதயங்களைத் தொட்டுள்ளன. அவை வரும் காலங்களிலும் தொடர்ந்து ஒலித்துக்கொண்டே இருக்கும். அவரது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் ரசிகர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். அவரது ஆன்மா அமைதியில் நிலைபெறட்டும்.” எனத் தெரிவித்துள்ளார்.

A. R. Rahman has expressed his condolences on the passing of music composer Deva.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.