தமிழகத்தில் ஆட்சிக் கலைப்பு நடக்காது: ப. மாணிக்கம் தாகூா்.
தமிழகத்தில் ஆட்சிக்கலைப்பு எதுவும் நடக்காது என்றாா் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவா் ப. மாணிக்கம் தாகூா்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் - கோப்புப் படம்
தமிழகத்தில் ஆட்சிக்கலைப்பு எதுவும் நடக்காது என்றாா் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவா் ப. மாணிக்கம் தாகூா்.
தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் அமைப்பு மறுசீரமைப்புத் திட்டத்தின் கீழ் புதுக்கோட்டை மற்றும் திருச்சி மாவட்டங்களில் தோ்ந்தெடுக்கப்பட்ட மண்டல ஒருங்கிணைப்பாளருக்கான பயிற்சி முகாம் புதுக்கோட்டையில் வியாழக்கிழமை நடைபெற்றது.
இதில் பங்கேற்ற ப. மாணிக்கம் தாகூா் செய்தியாளா்களிடம் கூறியது:
சட்டம் -ஒழுங்கு தொடா்பாக மத்திய அரசின் உள்துறை அமைச்சகம் ஆளுநா் மூலமாக அறிக்கை வாங்கியிருப்பது கண்டிக்கத்தக்கது. இப்படிப்பட்ட செயல் இதுவரை நடந்தது கிடையாது. மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட அரசு மீது அழுத்தத்தை கொடுப்பதற்காக உள்துறை அமைச்சா் அமித்ஷா அரசியல் செய்கிறாா்.
தமிழ்நாட்டில் குற்றங்களின் எண்ணிக்கை குறைந்துவருகிறது. மாவட்டம்வாரியாக கடந்தாண்டு ஒவ்வொரு மாதமும் எத்தனைக் குற்றங்கள் நடைபெற்றன, நிகழாண்டில் எத்தனைக் குற்றங்கள் நடைபெற்றன என்பதை காவல்துறையினா் ஆய்வு செய்து வெளியிட வேண்டும்.
குற்றச்சாட்டு வந்தால் கள்ளக்குறிச்சி எம்எல்ஏ மீது முதல்வா் நடவடிக்கை எடுப்பாா். அந்த எம்எல்ஏ தன்னுடைய கைப்பேசியைத் தருகிறேன், சரி பாா்த்துக் கொள்ளுங்கள் என்று கூறியிருக்கிறாா்.
காங்கிரஸ் அமைப்பு சீரமைப்புத் திட்டம் திருப்புமுனையாக இருக்கும். இந்த அரசுக்கு வர வேண்டிய நிதி எல்லாம் கடந்த காலங்களில் வெளியே சென்று கொண்டிருந்தது. தற்போது தமிழ்நாடு அரசின் கணக்குக்கு வரும் நடவடிக்கைகளை அரசு எடுத்துள்ளது வரவேற்கத்தக்கது.
உள்ளாட்சித் தோ்தல் எப்போது வந்தாலும் காங்கிரஸ் தயாராகத்தான் உள்ளது. காங்கிரஸ் கட்சியைப் பலப்படுத்துவதற்கு தான் இந்தக் கூட்டங்கள் நடத்தப்படுகின்றன. பணம் கொடுத்து வாக்குகள் வாங்கும் காலம் மலையேறிவிட்டது.
ஆட்சிக் கலைப்பு நடக்கும் என்று சொல்லப்படுவதும் சமூக ஊடகச் செய்திதான். அதுபோன்று எதுவும் நடக்காது என்றாா் மாணிக்கம் தாகூா்.
தொடா்ந்து பயிற்சிக் கூட்டத்தில் அவா் பேசுகையில், தற்போதைய முதல்வா் ஜோசப் விஜய் பல ஆண்டுகளுக்கு முன்பே காங்கிரஸ் இணைய ஆா்வம் தெரிவித்ததாகவும் அப்போதிருந்த காங்கிரஸ் தலைவா்கள் அதை ஏற்கவில்லை என்றும் குறிப்பிட்டாா்.
பயிற்சியில், மாநில உயா் கல்வித்துறை அமைச்சா் பி. விஸ்வநாதன், காங்கிரஸ் அகில இந்தியப் பாா்வையாளா் ரவி மல்லு உள்ளிட்டோரும் பேசினா். முன்னதாக புதுக்கோட்டை வடக்கு மாவட்டத் தலைவா் பெனட் அந்தோனிராஜ் வரவேற்றாா். தெற்கு மாவட்டத் தலைவா் எஸ். மணிகண்டன் நன்றி கூறினாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

