பிஎஃப் பணம் இருப்பு, பரிவர்த்தனையை வாட்ஸ்ஆப் மூலம் அறிவது எப்படி?
பிஎஃப் பணம் இருப்பு, பரிவர்த்தனையை வாட்ஸ்ஆப் மூலம் அறியும் வசதி அறிமுகம்

பிஎஃப் பணம் இருப்பு - file photo
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் உள்ள பண இருப்பு, பணப்பரிமாற்றங்கள் உள்ளிட்ட விவரங்களை வாட்ஸ்ஆப் மூலமே அறிந்து கொள்ளும் வசதி அறிமுகப்படுத்தப்படுகிறது.
பிஎஃப் கணக்கிலிருந்து கடைசியாக மேற்கொள்ளப்பட்ட 5 பணப்பரிமாற்றங்களையும் வாட்ஸ்ஆப் மூலமே பயனர்கள் அறிந்து கொள்ளலாம்.
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி என்பது, ஊதியத்தில் பணப்பிடித்தம் செய்யப்பட்டு, அந்நிறுவனத்திலிருந்து வெளியேறும்போது வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் ஒரு சேவையாக மட்டும் இருந்து வந்தது.
படிப்படியாக வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களுக்கு ஏற்ப பல வசதிகள் சேர்க்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் தற்போது இபிஎஃப்ஓ - புதிய சேவையுடன் அதுவும் மிகப் பயனுள்ள சேவையுடன் வந்திருக்கிறது.
ஒருவர், தங்களது பிஎஃப் கணக்கில் எவ்வளவு இருக்கிறது என்பதை அறிந்துகொள்ள அதிகாரப்பூர்வ இணையதளத்துக்குத்தான் செல்ல வேண்டும் என்பது இல்லை. இனி வாட்ஸ்ஆப் மூலமே சரிபார்த்துக் கொள்ள முடியும்.
இதற்கென 87964 41800 என்ற வாட்ஸ்ஆப் எண்ணிற்கு, பிஎஃப் கணக்கு வைத்திருக்கும் நபர், அதனுடன் இணைக்கப்பட்ட செல்போன் எண்ணிலிருந்து வாட்ஸ்ஆப் மூலம் Hi என்று செய்தி அனுப்ப வேண்டும். பிறகு அதில் வரும் மொழியை தெரிவு செய்து, உங்கள் விருப்பங்களையும் தெரிவு செய்து கொள்ளலாம்.
அதில், பிஎஃப் இருப்பு, கடைசியாக மேற்கொள்ளப்பட்ட 5 பரிவர்த்தனைகள், பாஸ்புக் பதிவிறக்கம் உள்ளிட்ட வாய்ப்புகள் இடம்பெற்றிருக்கும்.
இருப்புத் தொகையைப் பெற ஓடிபி அனுப்பப்படும். அதனை சரியாக உள்ளீடு செய்தால், வாட்ஸ்ஆப் மூலமாகவே இருப்புத் தொகையை அறிந்து கொள்ளலாம்.
இதனுடன், பயன்பாட்டில் இல்லாத இபிஎஃப் கணக்கிலிருந்து பணம் எடுப்பதும் எளிமையாக்கப்பட்டுள்ளது. அதாவது, பிஎஃப் கணக்கில் ரூ.1000 வரை இருப்பு இருந்தால், சந்தாதாரர்கள் அதனை எடுக்க கோரிக்கை படிவம் எதையும் நிரப்ப வேண்டாம்.
வாடிக்கையாளர், தங்களுடைய தனி நபர் அடையாளத்தையும், வங்கிக் கணக்கு சரிபார்வையும் முடித்துவிட்டாலே, நேரடியாக நிலுவைத் தொகை வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும்.
இதன் மூலம், பயன்பாட்டில் இல்லாத 1 லட்சம் கணக்குகள் விரைவில் தீர்வு காணப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கணக்குகளில் மட்டும் கிட்டத்தட்ட ரூ.5 கோடி உரிமைக் கோரப்படாத தொகை இருப்பதாகத் தரவுகள் தெரிவிக்கின்றன.
Summary
How to check your PF balance and transactions via WhatsApp?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

