வங்கி லாக்கரில் அதிகபட்சம் எவ்வளவு தங்கம் வைக்கலாம்? அறிவது அவசியம்!
வங்கி லாக்கரில் அதிகபட்சம் எவ்வளவு தங்கம் வைக்கலாம் என்பது பற்றி அறிவது அவசியம்...

வங்கி லாக்கர் வசதி - ANI
நாட்டில், பணக்காரர்கள் பலரும் தங்களது தங்க நகைகள், ஆவணங்கள் மற்றும் விலையுயர்ந்த பொருள்களை வாங்கி லாக்கரில் வைத்து பராமரிப்பார்கள்.
இதற்கென வங்கிகள் மாத வாடகை அல்லது ஆண்டுக் கட்டணம் போன்றவற்றை வசூலிக்கின்றன. ஆனால், யார் போனாலும் வங்கிகள் உடனே லாக்கர் சாவியை எடுத்துக் கொடுத்துவிடுவதில்லை.
ஒருவர், ஒரு வங்கியில் லாக்கர் வேண்டும் என்று கேட்டால், அதற்கென பல்வேறு கட்டுப்பாடுகள் உள்ளன. ஒரு சில வங்கிகள் இத்தனை லட்சங்களை தங்களது வங்கிகளில் நிரந்தர வைப்பாக டெபாசிட் வைத்தால் மட்டுமே, லாக்கர் வசதி வழங்கி வருகின்றன. இதுபோன்ற விதிமுறைகள் வங்கிக்கு வங்கி மாறுபடும்.
சரி, எப்படியோ ஒரு வங்கியின் லாக்கரை பெற்றுவிட்டோம், அதில் எவ்வளவு தங்கம் வைக்கலாம் என்பதை அறிந்து கொள்வது மிகவும் முக்கியம்.
எவ்வளவு தங்கம் வைக்கலாம்?
உண்மையில், வங்கி லாக்கர்களில் தங்க நகைகள் வைக்க ஆர்பிஐ எந்த உச்ச வரம்பையும் நிர்ணயிக்கவில்லை. அதுபோல, ஒரு லாக்கரில் இருக்கும் தங்க, வெள்ளி நகைகளின் அளவுகளையும் எந்த வங்கியும் கேட்பதில்லை. எனவே, எவ்வளவு நகைகளை வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளலாம்.
லாக்கர்களில் தங்கத்தை வைப்பது பாதுகாப்பானதா?
ஒரு லாக்கரில் எவ்வளவு தங்கத்தை வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளலாம். அதற்காக ஒருவர் கைவசம் உள்ள அனைத்து தங்க நகைகளையும் வைக்கலாமா என்றால், அதுபற்றி வங்கியின் விதிமுறைகளை அறிய வேண்டும்.
வங்கி, லாக்கரில் இருக்கும் பொருளுக்கான சேதத்துக்கு காப்பீடு செய்கிறதா?
லாக்கரில் சேதம், திருட்டு, தீ விபத்து, கொள்ளை அல்லது வங்கி ஊழியர்களால் மோசடி செய்யப்படும்போது, வங்கி எந்த அளவுக்கு அதில் பொறுப்பேற்றுக் கொள்ளும் என்பதை அறிய வேண்டும்.
சில வங்கிகள், ஆண்டுக் கட்டணமாக ரூ.3 ஆயிரம் வசூலித்தால், ஏதேனும் இழப்பு ஏற்படும்போது வெறும் ரூ.3 லட்சத்தை மட்டுமே அளிக்கும், ஒருவர் வைத்தது பல கோடி மதிப்பிலான நகைகளாக இருந்தாலும்கூட.
எனவே, அனைத்து விதிமுறைகளையும் அறிந்துகொண்டு லாக்கர் வசதியை தேர்வு செய்துகொள்வது புத்திசாலித்தனம்.
Summary
What is the maximum amount of gold you can keep in a bank locker? It’s important to know!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


