ஜென்சன் ஹுவாங் சிக்கல் ஓய்ந்தது! என்விடியா மற்றொரு நிர்வாகி - சீன ஊழியருக்கு உறவு?
ஜென்சன் ஹுவாங் சிக்கல் ஓய்ந்த நிலையில், என்விடியா மற்றொரு நிர்வாகி - சீன ஊழியருக்கு இடையே உறவு வெளிச்சத்துக்கு வந்தது.

ஜென்சன் ஹுவாங் - படம் - ஏபி
அமெரிக்காவைச் சேர்ந்த உலகின் முன்னணி சிப் தயாரிப்பு நிறுவனமான என்விடியாவின் தலைமைச் செயல் அதிகாரி ஜென்சன் ஹுவாங் பிரச்னை ஓய்ந்த நிலையில் நிறுவனத்தின் மற்றொரு நிர்வாகிக்கும், சீன நிறுவனத்தின் முக்கிய ஊழியருக்கும் இடையிலான உறவு பற்றிய தகவல்கள் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
சீன நிறுவனத்தின் ஊழியருடன் தொடர்பில் இருந்த குற்றச்சாட்டின் கீழ் வெளியேற்றப்பட்ட என்விடியாவின் தலைமைச் செயல் அதிகாரி (சிஇஓ) ஜென்சன் ஹுவாங் மீண்டும் அப்பதவியில் நியமிக்கப்பட்டு பிரச்னை முடிவுக்கு வந்த நிலையில், அடுத்த பூதம் வெளியாகியிருக்கிறது.
சிப் தயாரிப்பில் முன்னிலையில் இருக்கும் என்விடியாவிலிருந்து காதல் வலையில் சிக்கி, சீனாவுக்கு சிப்களை வழங்கிய குற்றச்சாட்டில் தற்போது ஜென்சன் மட்டுமல்ல, நிறுவனத்தின் மூத்த இந்திய-அமெரிக்க நிர்வாகி ஜே பூரியும் இணைந்துகொண்டார்.
சூப்பர் மைக்ரோ கம்ப்யூட்டரின் மூத்த நிர்வாகி ஒருவருடன் பல ஆண்டுகளாகக் காதலில் இருந்த ஜோ புரி, கடந்த மார்ச் மாதம் திருமணம் செய்துகொண்டதாக சர்வதேச ஆங்கில நாளிதழ் செய்தி வெளியிட்டிருந்தது.
சூப்பர் மைக்ரோ கம்ப்யூட்டர் நிறுவனத்தின் ஊழியர்கள், சிங்கப்பூரைச் சேர்ந்த ஒரு போலி நிறுவனம் மூலம், என்விடியா கிராபிக்ஸ் பிராசஸிங் யூனிட்கள் பொருத்தப்பட்ட 2.5 பில்லியன் டாலர் மதிப்புள்ள டேட்டா சர்வர்களை சீனாவில் உள்ள நுகர்வோருக்கு சட்டவிரோதமாக விற்பனை செய்ததில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.
அமெரிக்காவால் சீன உளவாளி என்று சந்தேகிக்கப்படும் ஆலிஸ் ஹுவாங் என்பவருடன் ஜென்சன் கொண்டிருந்த தொடர்பு, என்விடியா நிறுவனத்திலிருந்து மேம்பட்ட ஏஐ சிப்கள் சீனாவுக்குக் கடத்தப்பட்டதாக பெரும் சர்ச்சை வெடித்தது.
சீன உளவாளியாகச் சந்தேகிக்கப்படும் பெண்ணுடனான தனிப்பட்ட உறவு தேச பாதுகாப்புக்கு எதிரானதாக அமையும் என குற்றச்சாட்டு எழுந்ததால், தலைமைச் செயல் அதிகாரி பதவியை கடந்த 13 ஆம் தேதி ஜென்சன் ராஜிநாமா செய்திருந்த நிலையில், நிறுவனப் பங்குகள் கடும் சரிவை சந்தித்த நிலையில், மீண்டும் அப்பொறுப்பில் நியமிக்கப்பட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

