அதிக உப்பு, சர்க்கரை, கொழுப்பு! பொட்டலங்களில் தனித்தனி எச்சரிக்கை! உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தல்
அதிக உப்பு, அதிக சர்க்கரை, அதிக கொழுப்பு என உணவுப் பொட்டலங்களில் தனித்துவமான எச்சரிக்கை இடம்பெற வேண்டும் என உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தல்

உணவுப் பாதுகாப்பு - ENS
பொட்டலமிடப்பட்ட உணவுகளில் அதிகப்படியான கொழுப்பு, சர்க்கரை, உப்பு இருந்தால், அது பற்றி பொட்டலங்களில் தனித்தனியான எச்சரிக்கை சின்னங்கள் இடம்பெறுவதை உறுதி செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஜே.பி. பர்திவாலா மற்றும் கே. வினோத் சந்திரன் ஆகியோர் அடங்கிய அமர்வு, பொட்டலமிடப்பட்ட உணவுப் பொருள்களில் அதிக அளவு கொழுப்பு, சர்க்கரை மற்றும் உப்பு இருந்தால், அதுபற்றி வாங்குவோர் அறியும் வகையில் தனித்தனி எச்சரிக்கைச் சின்னங்கள் இடம்பெறுவதை உறுதி செய்யுமாறு மத்திய அரசுக்கும் இந்திய உணவுப் பாதுகாப்புத் தர நிர்ணய ஆணையத்திற்கும் (FSSAI) வியாழக்கிழமை உத்தரவிட்டது.
உணவுப் பாதுகாப்பு ஒழுங்குமுறை ஆணையம், தெளிவான மற்றும் எளிதில் கவனிக்கக்கூடிய குறியீட்டு முறை கட்டமைப்பை விவரித்து, இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஆறு பக்க இணக்க உறுதிமொழிப் பத்திரத்தை உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பித்த நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பொட்டலத்தின் முன் பக்கத்திலேயே, கவனத்தை ஈர்க்கும் நிறத்தில் எச்சரிக்கை வாசகம் இடம்பெற்றிருக்க வேண்டும், அதாவது அதிக கொழுப்பு, அதிக சர்க்கரை, அதிக உப்பு என்ற வார்த்தைகள் நிச்சயம் இடம்பெற்றிருக்க வேண்ம் என்று உத்தரவிட்டுள்ளது.
முக்கியத்துவம் வாய்ந்த் ஊட்டச்சத்துகளுக்கான வரம்பு அளவுகளை நிர்ணயிக்கும்போது, சேர்க்கப்பட்ட சர்க்கரை மற்றும் சேர்க்கப்பட்ட கொழுப்பு என்று குறிப்பிடுவதற்கு பதிலாக, மொத்த சர்க்கரை மற்றும் மொத்த கொழுப்பு ஆகியவற்றைக் கருத்தில் கொள்ளுமாறு இந்திய உணவுப் பாதுகாப்புத் தர நிர்ணய ஆணையத்திற்கும் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
மேலும், ஒவ்வொரு ஊட்டச்சத்துக்கான வரம்பு அளவுகளையும் அறிவியல் ரீதியாக நிரூபிக்கப்பட்ட ஆய்வு ஆதாரங்களின் அடிப்படையில் மறுசீரமைக்குமாறும், அந்த அளவுகள் மிகக் குறைவாகவோ அல்லது மிக அதிகமாகவோ இல்லாதிருப்பதை உறுதி செய்யுமாறும் உச்ச நீதிமன்றம் கேட்டுக்கொண்டுள்ளது.
Summary
High salt, sugar, and fat content! Separate warnings on packaged products! Supreme Court issues directive
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


