அரசு ஆண் ஊழியர்களுக்கு 15 நாள்கள் மகப்பேறு விடுப்பு: முதல்வர் விஜய் அறிவிப்பு!
தமிழ்நாடு அரசில் பணிபுரியும் ஆண் பணியாளர்களுக்கு முதன்முறையாக தந்தையர் மகப்பேறுகால விடுப்பு அளித்து ஜோசப் விஜய் அறிவித்துள்ளார்.

முதல்வர் விஜய். - (கோப்புப்படம்)
தமிழ்நாடு அரசில் பணிபுரியும் ஆண் பணியாளர்களுக்கு முதன்முறையாக தந்தையர் மகப்பேறுகால விடுப்பு அளித்து முதல்வர் ஜோசப் விஜய் அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாடு அரசில் பணிபுரியும் பெண் பணியாளர்களுக்கு 365 நாள்கள் மகப்பேறு விடுப்பு வழங்கப்பட்டு வரும் நிலையில், அரசு ஆண் பணியாளர்களுக்கும் தந்தையர் மகப்பேறுகால விடுப்பு வழங்கப் பரிசீலிக்க வேண்டுமென்ற கோரிக்கை பணியாளர்களிடமிருந்து அரசுக்கு வரப்பெற்றது.

தாய்க்கு குழந்தை பிறக்கும் காலகட்டம் என்பது தாய் மற்றும் குழந்தைக்கு மிகவும் முக்கியமானதாகும். உடல், மனரீதியான ஆதரவு வழங்குவதுடன் குழந்தை பராமரிப்பிலும் தந்தையின் பங்களிப்பு அவசியமாகிறது.
பெண் அரசுப் பணியாளர்களுக்கு 365 நாள்கள் மகப்பேறு விடுப்பு வழங்கப்படுவது தாய்மை மற்றும் குழந்தை நலனுக்கு அளிக்கப்படும் முக்கியத்துவத்தை வெளிப்படுத்துகிறது.
அதேபோன்று, ஆண் அரசுப் பணியாளர்களுக்கும் தந்தையர் மகப்பேறுகால விடுப்பு வழங்கப்படுவது குடும்பப் பொறுப்புகளைப் பகிர்ந்து கொள்ளவும், குழந்தை வளர்ப்பில் தந்தையின் பங்களிப்பை உறுதிப்படுத்தவும் உதவும்.
தமிழ்நாடு அரசு இந்தக் கோரிக்கையைக் கனிவுடன் பரிசீலித்து, திருமணமான ஆண் அரசுப் பணியாளர்களுக்கு அவர்தம் மனைவியின் மகப்பேறு காலத்தில் உடனிருக்க ஏதுவாக 15 நாள்கள் தந்தையர் மகப்பேறுகால விடுப்பு வழங்கியும் அந்த விடுப்பினைக் குழந்தை பிறப்பதற்கு 15 நாள்களுக்கு முன்பிருந்தோ அல்லது குழந்தை பிறந்த தேதியிலிருந்து ஆறு மாதங்களுக்குள்ளாகவோ எடுத்துக் கொள்ளவும்” ஆணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Summary
Joseph Vijay has announced the provision of paternity leave for male employees working in the Government of Tamil Nadu—a first-of-its-kind initiative.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

