உச்ச நீதிமன்ற உத்தரவை செயல்படுத்தியே ஆக வேண்டும் : வழக்கை முடித்து வைத்தது மதுரைக் கிளைடிசம்பர் 1 முதல் வாகன விலையை ரூ.8,000 வரை உயர்த்தும் ஹூண்டாய் இந்தியா!திருவண்ணாமலை தீபத்திருவிழா! 30 லட்சம் பக்தர்கள் பங்கேற்பு!பஞ்சாப் தேர்தல்! பாஜக - சிரோமணி அகாலி தளம் கூட்டணி அறிவிப்பு!திருப்பரங்குன்றம்: வழக்கமான இடத்தில் மகா தீபம் ஏற்றுவதற்கான பணிகள் தீவிரம்மதுரை புறப்பட்ட நயினார் நாகேந்திரன் கைது!தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் மீது 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு!அருள் விக்னேஷ் மீது புகார் கொடுத்தது முதல்வருக்குத் தெரியுமா? தெரியாதா? மு.க. ஸ்டாலின் கேள்விகார்த்திகை தீபம்! திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தாமிரக் கொப்பரை!

பெண்களுக்கு அண்ணனாகத் துணை நிற்பேன் என்ற விஜய் மெளனம் காப்பது ஏன்? சீமான்

கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ. அருள் விக்னேஷை உடனடியாகக் கைதுசெய்ய வேண்டும் சீமான் வலியுறுத்தியுள்ளது குறித்து...

vijay arul vignesh

ஜோசப் விஜய் / அருள் விக்னேஷ் - கோப்புப் படங்கள்

Updated On :

கள்ளக்குறிச்சி சட்டப்பேரவை உறுப்பினர் அருள் விக்னேஷை உடனடியாகக் கைதுசெய்ய வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தனது எக்ஸ் தளப் பக்கத்தில் சீமான் பதிவிட்டுள்ளதாவது:

கள்ளக்குறிச்சி சட்டப்பேரவை உறுப்பினர் அருள் விக்னேஷ் தனக்கு ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்பியதாகக் பெண் புகார் தெரிவித்திருப்பது தறிகெட்டு நிற்கும் தவெக ஆட்சியின் மோசமான நிலைக்கான சான்றாகும்.

பெண்களுக்கு எதிரான குற்றங்களில் சிறிதும் பொறுத்துக்கொள்ளாத (Zero Tolerance) கொள்கையைக் கடைப்பிடிப்போம் என்று மேடைகளில் வீராவேசமாக முழங்கிய முதல்வர் விஜய் அவர்கள், கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் மீது நடவடிக்கை எடுக்காது காப்பாற்றிவிட முனைந்தது எதற்காக?

அப்படியொரு சம்பவமே நடக்கவில்லை என அமைச்சர்களைக் கொண்டு பேச வைத்தது ஏன்? அதிமுக்கியத்துவம் வாய்ந்த இவ்விவகாரத்தில் இப்போதுவரை முதல்வர் விஜய் ஏன் வாய்திறக்கவில்லை? அமைதியாக இருந்து எதை சாதிக்க நினைக்கிறார்?

கடந்த சூலை 31 அன்றே இந்த விவகாரம் அரசின் கவனத்திற்குக் கொண்டுசெல்லப்பட்டு புகார் தெரிவிக்கப்பட்டுவிட்ட நிலையில், 115 நாட்களாக முதல்வர் விஜய் ஏன் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை?

புகார் தெரிவிக்கப்பட்டப் பிறகும், அப்படியொரு சம்பவமே நடக்கவில்லை என அரசுத்தரப்பு எதற்காக சப்பைக்கட்டு கட்டியது? இது மோசடித்தனம் இல்லையா? குற்றவாளியைக் காப்பாற்றும் விதத்திலான முதல்வர் விஜய்யின் நிர்வாக அணுகுமுறை இழிவானது இல்லையா? கடும் கண்டனங்கள்!

பெண்களுக்கு அண்ணனாகத் துணை நிற்பேன் என்றும், இரு பெண்களைக் கொள்கைத் தலைவர்களாக ஏற்றிருக்கிறோம் என்றும் மேடைதோறும் பேசிய முதல்வர் விஜய், இந்தப் புகார் அரசின் கவனத்துக்கு வந்தபோது ஏன் மௌனம் காத்தார்? நடவடிக்கை எடுக்க மறுத்தார்? தனிக்கட்சிப் பெரும்பான்மை இல்லாத தனது ஆட்சியைத் தக்க வைக்க எந்த எல்லைக்கும் முதல்வர் விஜய் செல்வாரேன்றால், இது மாற்றமா? கொடும் துர்நாற்றமா? என சீமான் பதிவிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.