திருப்பதி வரலாற்றில் முதல்முறை! 121 கிலோ தங்க நகை! காணிக்கை செலுத்திய சென்னை பக்தர்!
திருப்பதி ஏழுமலையானுக்கு 121 கிலோ தங்கம் காணிக்கை அளித்த சென்னை பக்தர் பற்றி...
திருப்பதி ஏழுமலையானுக்கு 121 கிலோ தங்கம் காணிக்கை - x
திருப்பதி ஏழுமலையானுக்கு ரூ. 160 கோடி மதிப்பிலான 121 கிலோ தங்க ஆபரணங்களை சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் காணிக்கையாக இன்று வழங்கியுள்ளார்.
திருப்பதி வரலாற்றிலேயே ஒரு தனிநபர் இவ்வளவு அதிக அளவிலான தங்க ஆபரணங்களை காணிக்கையாக செலுத்துவது இதுவே முதல்முறையாகும்.
கிரீடம், சங்கு, சக்கரம், தோள், கை, பாதங்களுக்கு அணிவிக்கும் ஆபரணங்கள், ஒட்டியாணம் என 45 வகையான ஆபரணங்கள், ஏழுமலையானின் தலை முதல் பாதம் வரை அணிவிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டு காணிக்கையாக வழங்கப்பட்டுள்ளது.
121 à°à±à°à±à°² à°¬à°à°à°¾à°°à°
— Tirumala Tirupati Devasthanams (@TTDevasthanams) November 26, 2026
45 à°à°à°°à°£à°¾à°²à±..!
**à°¶à±à°°à± à°µà±à°à°à°à±à°¶à±à°µà°° à°¸à±à°µà°¾à°®à°¿à°µà°¾à°°à°¿à°à°¿**
à°à°à±à°¤à±à°¡à°¿ à°à°ªà±à°°à±à°µ à°à°¾à°¨à±à°!
à°¶à±à°°à±à°µà°¾à°°à°¿à°à°¿ à°à°ªà°¾à°¦à°®à°¸à±à°¤à°à° à°à°²à°à°à°°à°¿à°à°à±à°à°¦à±à°à± à°ªà±à°°à°¤à±à°¯à±à°à°à°à°¾ à°°à±à°ªà±à°à°¦à°¿à°à°à°¿à°¨ à°¸à±à°µà°°à±à°£à°¾à°à°°à°£à°¾à°²à±
రాషà±à°à±à°° à°®à±à°à±à°¯à°®à°à°¤à±à°°à°¿ సమà°à±à°·à°à°²à± à°¨à±à°¡à± à°¸à±à°µà°¾à°®à°¿à°µà°¾à°°à°¿à°à°¿ సమరà±à°ªà°£#TTD #Tirumala #TTDOfficialUpdates⦠pic.twitter.com/m89R5Gt0E4
திருப்பதியில் இன்று நடைபெற்ற நிகழ்வில், ஆந்திரப் பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடு முன்னிலையில், சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர் வர்த்தமான் ஜெயின் என்பவர், இந்த காணிக்கை தேவஸ்தான அதிகாரிகளிடம் முறைப்படி ஒப்படைத்தார்.
நாளை காலை நடைபெறும் அபிஷேகத்துக்குப் பிறகு, வர்த்தமான் வழங்கிய ஆபரணங்களைக் கொண்டு ஏழுமலையான் அலங்கரிக்கப்ப்படுவார் என்று தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
இதற்கு முன்னதாகவும் திருப்பதி தேவஸ்தானத்துக்கு பல்வேறு காணிக்கைகளை வர்த்தமான் ஜெயின் வழங்கியுள்ளார். மின்சார பேருந்துகள், ஸ்ரீ வெங்கடேஸ்வர பக்தி சேனல் மேம்பாட்டிற்காக ரூ. 7 கோடி, தேவஸ்தான கோசாலையில் கால்நடைத் தீவனக் கலவை ஆலை அமைப்பதற்காக ரூ. 5 கோடி, உண்டியல் காணிக்கை நாணயங்களை எண்ணும் இயந்திரத்திற்காக ரூ. ஒரு கோடி உள்ளிட்ட காணிக்கைகள் வழங்கியுள்ளார்.
தற்போது தனது நிறுவனத்தின் 60 சதவிகித பங்குகளை விற்றதன் மூலம் சுமார் ரூ. 6,000 கோடி வர்த்தமன் ஜெயின் பெற்றதாகவும், அதிலிருந்து 121 கிலோ தங்கத்தை காணிக்கையாக அவர் முடிவு செய்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
Summary
A first in the history of Tirupati! A devotee from Chennai offers 121 kilograms of gold jewelry!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


