நிஜரூப தரிசனம்: இன்று தவறினால் அடுத்து ஒரு வருடம் காத்திருக்க வேண்டும்!
தியாகராஜசுவாமி நிஜரூப தரிசனத்தை காண பக்தர்கள் திரண்டது பற்றி..

வரிசையில் காத்திருக்கும் பக்தர்கள் - file image
திருஒற்றியூரில் உள்ள தியாகராஜசுவாமியின் நிஜரூப தரிசனத்தை பக்தர்கள் இன்று தவறவிட்டால் அடுத்து ஒரு வருடத்திற்கு காத்திருக்க வேண்டும்.
சென்னை திருஒற்றியூரில் அருள்பாலித்து வரும் அருள்மிகு தியாகராஜசுவாமி கோயிலில் நிஜரூப தரிசனம் நவம்பர் 24-ஆம் தேதி முதல் ஆதிபுரீஸ்வரர் சுவாமியின் கவசம் திறக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு கார்த்திகை மாதம் பௌர்ணமியை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை மாலை 6 மணியளவில் தியாகராஜரின் கவசம் திறக்கப்பட்டது.
ஈசனின் நிஜரூப தரிசனத்தைக் காண உள்ளூரில் மட்டுமல்லாமல், பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான மக்கள் பொறுமையுடன் வரிசையில் காத்திருந்து தரிசித்துச் செல்கின்றனர்.
நவம்பர் 26-ஆம் தேதி (வியாழக்கிழமை) இரவு வரை ஸ்ரீ ஆதிபுரீஸ்வரர் நிஜரூப தரிசனத்தை பக்தர்கள் கண்டு மகிழலாம்.
ஆதிபுரீஸ்வருக்கு மூன்று நாள்களும் தைல அபிஷேகம் நடத்தப்பட்டு, வியாழக்கிழமையான இன்று இரவு கவசம் சாத்தப்படும்.
இத்திருக்கோயிலில் புற்று வடிவ சுயம்பு லிங்கத் திருமேனியாக சிவபெருமான் அருள்பாலிப்பதால் நாள்தோறும் அபிஷேகம் நடத்தப்படுவதில்லை.
புற்று வடிவிலான சுயம்பு லிங்கத் திருமேனியின் நிஜ ரூப தரிசனத்தைக் காண நாம் பாக்கியம் செய்திருக்க வேண்டும் என்றே சொல்லலாம். இது ஆண்டுக்கு மூன்று நாள்கள் மட்டுமே நடைபெறும் விசேஷ நிகழ்வாகும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


