காவிரி: அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட மு.க. ஸ்டாலின் வலியுறுத்தல்திருப்பரங்குன்றம்: நிபந்தனையுடன் தீபமேற்ற உச்சநீதிமன்றம் அனுமதிஉங்கள் பெயரில் பிஎஃப் கணக்கு இருக்கிறதா? இனி கொண்டாட்டம்தான் போங்க!நிரம்பி வழியும் சபரிமலை முன்பதிவு! வருவதோ பாதி பக்தர்கள்! சிக்கலில் கோயில் நிர்வாகம்!திமுக முன்னாள் அமைச்சர் மூர்த்தியின் உறவினர்கள் வீடுகளிலும் சோதனை!கீர்த்தனாதான் தவெக அரசின் துரந்தரா? எடப்பாடி பழனிசாமி கேள்விகாவிரி நீரை திறந்துவிடுமாறு உத்தரவிடக் கோரிய தமிழக அரசின் மனு தள்ளுபடி! உச்ச நீதிமன்றம்கனிம வளங்கள் கொள்ளை குறித்து விசாரணை ஆணையம் அமைக்க கோரிய வழக்கு தள்ளுபடிசிறப்பு டெட் தேர்வு: விண்ணப்பங்களில் பிழைகளைத் திருத்த நவ. 22 வரை அவகாசம்

நவ. 24 முதல் 3 நாள்கள்! திருஒற்றியூர் ஆதிபுரீஸ்வரரின் நிஜரூப தரிசனம்!

ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே நிகழும் அரிய நிகழ்வான நிஜரூப தரிசனம் பற்றி..

திருவொற்றியூர் நிஜரூப தரிசனம்

Updated On :

சென்னை திருவொற்றியூரில் அருள்பாலித்து வரும் அருள்மிகு தியாகராஜசுவாமி கோயிலில் நிஜரூப தரிசனம் நவம்பர் 24-ஆம் தேதி முதல் ஆதிபுரீஸ்வரர் சுவாமியின் கவசம் திறக்கப்படுகிறது.

இந்த ஆண்டு கார்த்திகை மாதம் பௌர்ணமியை முன்னிட்டு நவம்பர் 24-ம் தேதி (செவ்வாய்க்கிழமை) மாலை 6 மணியளவில் திறக்கப்பட்டு நவம்பர் 26-ஆம் தேதி (வியாழக்கிழமை) இரவு வரை ஸ்ரீ ஆதிபுரீஸ்வரர் நிஜரூப தரிசனத்தை பக்தர்கள் கண்டு மகிழும் வகையிலான வழிவகை செய்யப்பட்டுள்ளது.

ஆதிபுரீஸ்வருக்கு மூன்று நாள்களும் தைல அபிஷேகம் நடத்தப்படும். நவ. 26-ஆம் தேதி (வியாழக்கிழமை) இரவு கவசம் மூடப்படும்.

இத்திருக்கோயிலில் புற்று வடிவ சுயம்பு லிங்கத் திருமேனியாக சிவபெருமான் அருள்பாலிப்பதால் நாள்தோறும் அபிஷேகம் நடத்தப்படுவதில்லை.

புற்று வடிவிலான சுயம்பு லிங்கத் திருமேனியின் நிஜ ரூப தரிசனத்தைக் காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள். இது ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே நடைபெறும் விசேஷ பூஜையாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.