திருப்பதி ஏழுமலையானுக்கு 121 கிலோ தங்க ஆபரணங்களை வழங்கும் பக்தர்! நீலகிரி, கொடைக்கானலில் 2 நாள்களுக்கு உறைபனி! வானிலை எச்சரிக்கை! அக்வான் புயல்: ராஞ்சியில் 20 விமானங்கள் ரத்து! அமெரிக்காவின் அதிநவீன ட்ரோனை சுட்டு வீழ்த்திய ஈரான்! தவெக ஆட்சி தானாக கவிழ்ந்துவிடும் - எடப்பாடி பழனிசாமி தவெக ஆட்சியில் உயிருக்கும் பயிருக்கும் பாதுகாப்பு இல்லை! டி.ஆர்.பி. ராஜா தங்க நகைகளில் கலப்படம்! கண்டுபிடிக்க முடியாத ரேனியம் உலோகம்! ஹால்மார்க் முத்திரையும் வீணா? கண்டுபிடிப்பது எப்படி?செனா நாடுகளில் சதம் அடித்த இந்தியராக கே.எல். ராகுல் வரலாற்றுச் சாதனை

திருப்பதி ஏழுமலையானுக்கு 121 கிலோ தங்க ஆபரணங்களை வழங்கும் பக்தர்!

திருப்பதி ஏழுமலையானுக்கு 121 கிலோ தங்க ஆபரணங்களைப் பக்தர் ஒருவர் காணிக்கையாக வழங்க இருப்பது பற்றி...

Devotee to donate 121 kg gold ornaments to Tirupati Lord Venkateswara on Nov 26

திருப்பதி ஏழுமலையான் கோயில்.

Updated On :

நவம்பர் 26-ஆம் தேதி திருப்பதி ஏழுமலையானுக்கு 121 கிலோ தங்க ஆபரணங்களைப் பக்தர் ஒருவர் காணிக்கையாக வழங்கவுள்ளார்.

திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்குச் சுமார் ரூ.160 கோடி மதிப்பிலான 121 கிலோ தங்க ஆபரணங்களைப் பக்தர் ஒருவர் காணிக்கையாக வழங்க முன்வந்துள்ளார்.

இதுகுறித்து அரசு அதிகாரி ஒருவர் சனிக்கிழமை பி.டி.ஐ செய்தி நிறுவனத்திடம் கூறுகையில், "நவம்பர் 26-ஆம் தேதி திருமலையில் உள்ள ஏழுமலையானுக்குப் பக்தர் ஒருவர் 121 கிலோ தங்க ஆபரணங்களை வழங்கவுள்ளார்.

ஒன்பது தொகுப்புகளாக வடிவமைக்கப்பட்ட 45 ஆபரணங்களைக் கொண்ட இதன் மதிப்பு ரூ.150 கோடி முதல் ரூ.160 கோடி வரை இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது" என்று தெரிவித்தார்.

அந்த பக்தர் திருமலை திருப்பதி தேவஸ்தானத்துடன் இதுதொடர்பான ஆலோசனைகளை நிறைவு செய்துவிட்டதாகவும், கோயிலில் உள்ள தேவஸ்தான நிர்வாகத்திடம் இந்த ஆபரணங்களை ஒப்படைப்பார் என்றும் அந்த அதிகாரி மேலும் கூறினார்.

திருமலையில் உள்ள ஏழுமலையானுக்குத் தனிநபர் ஒருவர் வழங்கும் மிகப்பெரிய காணிக்கை இதுவாகவே இருக்கும் என தேவஸ்தான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Summary

A devotee has come forward to donate 121 kg of gold ornaments valued at around Rs 160 crore to Tirupati Lord Venkateswara temple, and the donation is touted to be the largest ever individual donation to the globally famous hill shrine, government and TTD sources said.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.