சென்னை போக்சோ நீதிமன்றத்தில் வீரமணி ஆஜர்!அரிசி விலை உயர்வு இன்னும் ஆட்சியாளர்களின் காதுகளுக்கு எட்டவில்லை போலும்! பெ. சண்முகம்பெரம்பூர் தொகுதியில் முதல்வர் விஜய்! மக்களிடம் மனுக்களைப் பெற்றார்!மாதவரம் ஆவின் பால் பண்ணை ஆய்வகக் கட்டடத்தை திறந்து வைத்தார் முதல்வர் விஜய்!ராகுல், பிரியங்கா மீது தில்லி காவல்துறை வழக்குப்பதிவு!ரெப்போ வட்டி விகிதம் 5.50% ஆக உயர்வு! வீட்டு, வாகன கடன் வட்டி அதிகரிக்க வாய்ப்பு!‘தவெக ஆட்சியில் மின்வெட்டை மிஞ்சும் அரிவாள் வெட்டு’ - மு.க. ஸ்டாலின் கண்டனம்

திருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவம்: 15 நிமிடங்களில் விற்றுத் தீர்ந்த 72,000 டிக்கெட்டுகள்

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நவராத்திரி பிரம்மோற்சவத்தின் சிறப்பு தரிசனத்துக்கான முன்பதிவு குறித்து...

tirupati temple file photo

திருப்பதி ஏழுமலையான் கோயில்

Published On :

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நவராத்திரி பிரம்மோற்சவத்தின் சிறப்பு தரிசனத்துக்கான முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களிலேயே அனைத்து டிக்கெட்டுகளும் விற்றுத் தீர்ந்தன.

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அக்டோபா் 12, 13, 14, 18, 19 மற்றும் 20 ஆகிய தேதிகளில் நடைபெறும் ஏழுமலையான் நவராத்திரி பிரம்மோற்சவங்களுக்கான ரூ. 300 சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட்டுகள் திருமலை தேவஸ்தானம் இன்று (அக்.7) காலை 10 மணிக்கு அதிகாரபூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டது. நாளொன்றுக்கு 12,000 டிக்கெட்டுகள் வீதம் 6 நாள்களுக்கு 72,000 டிக்கெட்டுகள் வெளியாகின.

இந்த நிலையில், இணையத்தில் சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட்டுகள் காலை 10 மணிக்குத் தொடங்கிய வெறும் 15 நிமிடங்களிலேயே 72,000 டிக்கெட்டுகளும் விற்றுத் தீர்ந்தன.

அதுமட்டுமின்றி, திருமலை திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கடந்த 9 மாதங்களில் உண்டியல் வசூல் மட்டும் ரூ. 1,129.04 கோடி கிடைத்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Summary

Tirupati Navaratri Brahmotsavam Darshan: 72,000 tickets sold out in 15 minutes

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.