
6 நிமிடத்தில் 1,600 மீ! ஊர்க்காவல் படையில் சேர சேலையில் வெறுங்காலுடன் ஓடிய பெண்!
ஊர்க்காவல் படையில் சேர சேலையில் வெறுங்காலுடன் ஓடிய பெண்...

ஊர்க்காவல் படையில் சேர சேலையில் வெறுங்காலுடன் ஓடிய பெண் - X
ஜார்க்கண்டில் நடைபெற்ற ஊர்க்காவல் படை தகுதித் தேர்வில் பங்கேற்ற பெண் ஒருவர், சேலை அணிந்து வெறுங்காலுடன் ஓடும் விடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.
ஜார்க்கண்ட் மாநிலம், ராம்கர் மாவட்டத்தில் 284 ஊர்க்காவல் படை பணியிடங்களுக்கான ஆள்சேர்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. அக்டோபர் 24 முதல் நவம்பர் 5 வரை நடைபெறும் இந்தச் செயல்முறையில், 50 சதவிகித இடங்கள் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. மேலும், விதவைகள் மற்றும் விவாகரத்து பெற்ற பெண்களுக்குக் கூடுதலாக 5 சதவிகித இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.
இதற்கான உடல் தகுதித் தேர்வில் பங்கேற்ற சோசோ கிராமத்தைச் சேர்ந்த கவிதா குமாரி என்ற பெண், சேலை அணிந்து வெறுங்காலில் 1,600 மீ தூரத்தைக் கடந்த விடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
உடல் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற 1,600 மீ தூரத்தை 10 நிமிடத்தில் கடக்க வேண்டும் என்ற நிலையில், வெறும் 6 நிமிடத்தில் இலக்கை அடைந்துள்ளார் கவிதா குமாரி.
கணவரை இழந்த கவிதா குமாரி, செங்கல் சூளையில் வேலை செய்து தனது இரு குழந்தைகள் மற்றும் வயதான மாமனார், மாமியாரை பராமரித்து வருகிறார்.
ஓடுவதற்கான காலணிகளோ, விளையாட்டு உடைகளோ வாங்கும் வசதி இல்லாத கவிதா குமாரி, ஊர்க்காவல் படையில் சேரும் நோக்கில், நாள்தோறும் அதிகாலை 4 மணிக்கு எழுந்து, வெறுங்காலில் ஓடி பயிற்சி பெற்று வருதவாத தெரிவித்துள்ளார்.
தனது குழந்தைகளின் எதிர்காலத்தை மேம்படுத்தும் நோக்கில் ஊர்க்காவல் படையில் சேர விரும்புவதாகக் கவிதா தெரிவித்துள்ளார்.
கவிதா குமாரி வெறுங்காலில் ஓடிய விடியோ இணையத்தில் வைரலானதைத் தொடர்ந்து, உள்ளூர் தடகள பயிற்சிக் குழுவினர் அவரின் வீட்டுக்குச் சென்று பாராட்டியுள்ளனர்.
Summary
1,600 meters in 6 minutes! Woman runs barefoot in a saree to join the Home Guard!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







