முதல்வர் விஜய்யுடன் ஒரேயொரு படம்; பணிப்பெண்ணுக்காக பிரியங்கா வைத்த கோரிக்கை!மதுரை நகைக் கடையில் கொள்ளையடிக்கப்பட்டது எவ்வளவு? காவல் ஆணையர் ராஜேந்திரன் பதில்மத்திய கப்பல் துறை அமைச்சருடன் ஆதவ் அர்ஜுனா சந்திப்பு: 5 திட்டங்களுக்கு நிதி வழங்க கோரிக்கை!108 சேவை மையத்தில் முதல்வர் விஜய் ஆய்வு!தொடர்ந்து 2வது நாளாக ஏற்றம் கண்ட சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி!முதல்வருக்கு அரோகரா; ஆட்சிக்கு முன்பும் பின்பும் ரீல்ஸ்: இபிஎஸ் கண்டனம்அண்ணன் சீர் திட்டத்தில் விண்ணப்பிப்பது எப்படி? யாருக்கெல்லாம் கிடைக்கும்? முழு விவரம்தவெக கல்வி விருது விழா! ராகுலுக்கு முதல்வர் விஜய் அழைப்பு!ஓய்வுபெற்றார் தோனி! சென்னை சூப்பர் கிங்ஸ் ஆலோசகராக நியமனம்!தங்கம் விலை மேலும் குறையுமா? 11 மாதங்களுக்குப் பின்... 1 லட்சத்துக்குக் கீழ்!மதுரை நகைக் கடை கொள்ளை! பெரும்பாலான கேள்விகளுக்கு ஒரே பதில்!மதுரை நகைக்கடை கொள்ளை! நிஷாந்த் கையில் போட்டிருந்த டாட்டூ காட்டிக் கொடுத்ததா?முதல்வர் விஜய்யை முருகரோடு ஒப்பிட்டேனா? நான் பாடியதில் தவறில்லை - புஷ்பவனம் விளக்கம்அமெரிக்கா முழுவதும் வங்கிகள் சேவை முடங்கியது!

வீட்டில் எப்போதும் சண்டை சச்சரவா? இவையும் காரணமாக இருக்கலாம்!

வீட்டில் எப்போதும் சண்டை சச்சரவு இருந்தால் தேவையற்ற சில பொருள்களும் அதற்குக் காரணமாக இருக்கலாம் என்பது பற்றி..

Home security

வீட்டின் வாயில் - ENS

Updated On :

வீட்டில் தேவையே இல்லாமல் எப்போதும் சண்டை சச்சரவுகள் இருந்து, நிம்மதியே இல்லாவிட்டால், வீட்டுக்குள் எதிர்மறை ஆற்றலை உள்ளிழுக்கும் சில பொருள்களும் காரணியாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

பேசினாலே தகராறுதான், வாயை திறக்க முடியவில்லை, நிம்மதியே இல்லை என்று சொல்பவர்கள், ஒரு முறை, வீட்டின் வரவேற்பறையை சுற்றிப் பாருங்கள்.

வரவேற்பறையில் வழக்கமாக குடும்ப புகைப்படங்கள், இயற்கைக் காட்சிகள், அழகிய புகைப்படங்கள் இடம்பெறலாம். அதைத் தவிர்த்து ஆக்ரோசமான அல்லது மனநிலையை கோபமாக மாற்றுவது போன்ற புகைப்படங்கள் இருந்தால் அதனை எடுத்துவிடவும்.

வரவேற்பறைையில், உடைந்த சிலைகள், பொருள்கள், சிதிலமடைந்த படங்கள், தூக்கி எறிய வேண்டிய பொருள்கள் போன்றவற்றையும் தேவையில்லாத பொருள்களையும் வைத்திருக்கவே கூடாது.

இவை எதிர்மறை ஆற்றலை இழுக்கும் சக்தி கொண்டிருப்பதால் தேவையில்லாத உடைந்த, சேதமடைந்த பொருள்களைத் தேவைப்படும் என்று வீட்டில் சேமித்து வைக்க வேண்டாம் என்று முன்னோர்கள் கூறியிருக்கிறார்கள்.

வீட்டுக்குள் எதிர்மறை ஆற்றலை வரவழைக்கும் இதுபோன்ற எதையும் குறிப்பாக வரவேற்பறையில் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

கூர்மையான பொருள்கள், வாளுடன் இருக்கும் சிலைகள், ஆபத்தை ஏற்படுத்தும் பொருள்கள் போன்றவையும் வீட்டில் ஒரு அமைதியான சூழ்நிலையை குலைக்கும் என்பதால் வரவேற்பறையில் இருந்து அப்புறப்படுத்திவிடவும்.

பழைய காகிதங்கள், குப்பைகள், காலியான தேநீர் கோப்பைகள், செயலிழந்த ரிமோட் கன்ட்ரோல்கள், ஒயர்கள், பிய்ந்து போன செருப்பு அல்லது குடை போன்றவற்றையும் வரவேற்பறையின் மூலையில் போட்டு வைக்க வேண்டாம்.

இவற்றால்தான் வீடுகளில் சண்டை வருகிறதா? என்றால் நிச்சயம் இல்லை, இவை மனித மனநிலையை மாற்றுகின்றன. ஒரு அமைதியற்ற சூழலை, கோப உணர்ச்சியை தூண்டுகின்றன. இவையும் வீட்டில் அவ்வப்போது நேரிடும் சர்ச்சைகளுக்குக் காரணமாகலாம் என்பதால் வீட்டை முடிந்த அளவுக்கு சுத்தமாகவும் அழகாகவும் வைத்துக் கொள்ள முயலவும்.

Summary

Is there constant fighting and bickering at home? These could be the reasons!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.