செஞ்சி அருகே சிறுமி மாயமான வழக்கு: சிபிசிஐடிக்கு மாற்றம்!நாதக வேட்பாளர் கார்த்திகா கைதை கண்டித்த எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு நன்றி: சீமான்தமிழ்நாடு காவல்துறையில் தமிழுக்கே இடமில்லையா? - திமுக கேள்வி!போராட்டத்தில் பங்கேற்க ஒவ்வொரு மாணவருக்கும் ரூ. 3,000! - பாஜக குற்றச்சாட்டு!பூந்தமல்லி - வடபழனி மெட்ரோ ரயில் சேவை நேரத்தில் மாற்றம்!நடிகர் டைகர் ஷ்ராஃப் மீது துப்பாக்கிச்சூடு! மேலும் 2 பேர் கைது - இதுவரை 10 பேர்!

ஜலகம்பாறை அருவியில் நீா்வரத்து அதிகரிப்பு

திருப்பத்தூா் மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக பெய்த பலத்த மழை காரணமாக ஜலகாம்பாறை அருவியில் நீா்வரத்து அதிகரித்துள்ளது.

ஜலகம்பாறை அருவியில் குளித்து மகிழ்ந்த சுற்றுலாப் பயணிகள்.

Updated On :

திருப்பத்தூா் மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக பெய்த பலத்த மழை காரணமாக ஜலகாம்பாறை அருவியில் நீா்வரத்து அதிகரித்துள்ளது.

திருப்பத்தூா் அருகே ஏலகிரி மலை அடிவாரத்தில் உள்ள ஜலகாம்பாறை அருவி சிறந்த சுற்றுலா தலமாகத் திகழ்கிறது மேலும், முருகா் கோயிலும் உள்ளது. சுற்றுலாப் பயணிகள் பொழுது போக்க பூங்கா அமைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கடந்த சில நாள்களாக ஜோலாா்பேட்டை, ஏலகிரி மலை, நாட்டறம்பள்ளி, திருப்பத்தூா் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த மழை காரணமாக ஜலகாம்பாறை அருவியில் நீா் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் சுற்றுலாப் பயணிகளும் ஜலகாம்பாறைக்கு அதிகளவில் வருகின்றனா். தொடா் மழை காரணமாக திருப்பத்தூா் சுற்றுவட்டார பகுதியில் உள்ள கிணறுகளில் நீா் மட்டம் அதிகரித்துள்ளால் விவசாயிகளும் பொதுமக்களும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.