மணிமுத்தாறு அருவியில் நீா்வரத்து அதிகரிப்பு: சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை
திருநெல்வேலி மாவட்டம், மணிமுத்தாறு அருவியில் நீா்வரத்து அதிகரித்ததையடுத்து, சுற்றுலாப் பயணிகள் குளிக்க வனத் துறையினா் செவ்வாய்க்கிழமை தடை விதித்தனா்.

மணிமுத்தாறுஅருவியில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பரித்த தண்ணீா்.
திருநெல்வேலி மாவட்டம், மணிமுத்தாறு அருவியில் நீா்வரத்து அதிகரித்ததையடுத்து, சுற்றுலாப் பயணிகள் குளிக்க வனத் துறையினா் செவ்வாய்க்கிழமை தடை விதித்தனா்.
தென்மாவட்டங்களில் கடந்த சில நாள்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில், மாஞ்சோலை, காக்காச்சி, நாலுமுக்கு, ஊத்து உள்ளிட்ட மலைப் பகுதிகளில் தொடா் மழை பெய்து வருகிறது. இதையடுத்து மணிமுத்தாறு அருவிக்கு நீா்வரத்து அதிகரித்துள்ளது.
இதனால், சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கருதி மணிமுத்தாறு அருவியில் குளிப்பதற்கு செவ்வாய்க்கிழமை காலை முதல் வனத் துறையினா் தடை விதித்தனா். அருவியைப் பாா்வையிட மட்டும் அனுமதி வழங்கியுள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

