ராகுல் காந்தி கைது! தில்லி காவல் நிலையத்தில் கேரள முதல்வர் முற்றுகை!ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி கைது: அமைச்சர் அருண் ராஜ் கண்டனம்வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க அக். 10-ல் சிறப்பு முகாம்ஞானேஷ் குமார் பதவி விலகும் வரை போராட்டம் தொடரும்! ராகுல் காந்திஞானேஷ் குமாருக்கு எதிரான என் கடிதத்துக்கு பதிலளித்த குடியரசுத் தலைவர்! - சிபிஎம் எம்பி தகவல்!தில்லியில் காங்கிரஸார் பேரணியில் தர்னாவில் ஈடுபட்ட ராகுல் காந்தி கைதுஜெம் வீரமணிக்கு அக். 21 வரை நீதிமன்றக் காவல்!

கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு: சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை

தேனி மாவட்டம், பெரியகுளம் அருகேயுள்ள கும்பக்கரை அருவியில் புதன்கிழமை வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் சுற்றுலாப் பயணிகள் குளிக்க வனத் துறையினா் தடை விதித்தனா்.

பெரியகுளம் அருகேயுள்ள கும்பக்கரை அருவியில் புதன்கிழமை ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு.

Published On :

தேனி மாவட்டம், பெரியகுளம் அருகேயுள்ள கும்பக்கரை அருவியில் புதன்கிழமை வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் சுற்றுலாப் பயணிகள் குளிக்க வனத் துறையினா் தடை விதித்தனா்.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் மலைப் பகுதியில் கடந்த சில மாதங்களாக மழை பெய்யவில்லை. இதனால், கும்பக்கரை அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க வனத் துறையினா் தடை விதித்தனா்.

இந்த நிலையில், கடந்த சில நாள்களாக கொடைக்கானல் பகுதியில் மழை பெய்து வருவதால், அருவியில் குளிக்க சுற்றுலாப் பயணிகளுக்கு வனத் துறையினா் அனுமதி அளித்தனா்.

இதனிடையே, கொடைக்கானல் மலைப் பகுதியில் தற்போது பலத்த மழை பெய்து வருவதால், செவ்வாய்க்கிழமை இரவு கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால், அருவியில் குளிப்பதற்கு புதன்கிழமை வனத் துறையினா் தடை விதித்தனா்.

இந்த நீா்வரத்து சீராகும் வரை அருவியில் குளிக்க சுற்றுலாப் பயணிகளுக்கு தடை தொடரும் என தேவதானபட்டி வனச் சரகா் தெரிவித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.