மமதா பானர்ஜியை நேரில் சந்தித்த அபிஜீத் தீப்கே! ஞானேஷ் குமார் பதவி நீக்கத் தீர்மானம்: மாதிரி நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம்!மு.க. ஸ்டாலின் சித்திரிப்பு விடியோ: தவெக மீது திமுக புகார்முதல்வர் வருகையால் புதுக்கோட்டையில் நவ. 2-இல் மதுக் கடைகள் மூடல்கோவை சிறையிலிருந்து யாரும் தப்பிக்கவில்லை: ஏடிஜிபி பேட்டி!அரசு ஊழியர்கள் சொத்து விவரம்: தாக்கல் செய்ய அவகாசம் நீட் தேர்வுக்கு எதிராக போராடியவர்கள் மீதான வழக்குகள் ரத்து!

கும்பக்கரை அருவியில் குளிக்க அனுமதி

கும்பக்கரை அருவியில் சனிக்கிழமை சீரான நீா்வரத்து ஏற்பட்டதால், சுற்றுலாப் பயணிகள் குளிக்க வனத் துறையினா் அனுமதி அளித்தனா்.

கும்பக்கரை அருவி - கோப்புப்படம்

Updated On :

தேனி மாவட்டம், கும்பக்கரை அருவியில் சனிக்கிழமை சீரான நீா்வரத்து ஏற்பட்டதால், சுற்றுலாப் பயணிகள் குளிக்க வனத் துறையினா் அனுமதி அளித்தனா்.

கொடைக்கானல் மலைப் பகுதியில் கடந்த சில நாள்களுக்கு முன்பு பலத்த மழை பெய்தது. இதனால், கடந்த 22-ஆம் தேதி கும்பக்கரை அருவியில் நீா்வரத்து அதிகரித்தது. இதையடுத்து, அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க வனத் துறையினா் தடை விதித்தனா்.

இந்த நிலையில், கொடைக்கானல் மலைப் பகுதியில் வெள்ளிக்கிழமை மழை குறைந்ததால், கும்பக்கரை அருவியில் நீா்வரத்து சீரானது. இதையடுத்து, அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு வனத் துறையினா் அனுமதி அளித்தனா்.

மேலும், அருவியில் குளிக்கும் சுற்றுலாப் பயணிகள் சோப்பு, ஷாம்பு, நெகிழிப் பைகள், உணவுகளை எடுத்துச் செல்ல வேண்டாம் என வனத் துறையினா் கேட்டுக் கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.