சென்னைக்கு விடுக்கப்பட்ட ரெட் அலர்ட் வாபஸ்! - வானிலை ஆய்வு மையம்சென்னை வெள்ளம்: திமுக ஆட்சி முடிந்து தவெக வந்த பிறகும் அதே நிலைதான்! அன்புமணி கனமழை எச்சரிக்கை: சென்னை ரிப்பன் மாளிகையில் முதல்வர் விஜய் ஆய்வு சென்னைக்கு ரெட் அலர்ட்! அரக்கோணத்தில் விரைந்தது தேசிய பேரிடர் மீட்புப் படை!அதிகனமழை எச்சரிக்கை! சென்னைக்கு விரைந்தது தேசிய பேரிடர் மீட்புப் படை!வடகிழக்குப் பருவமழை: முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தயார்! செங்கோட்டையன்சொந்த ஊர் கொண்டு வரப்பட்ட தேவா உடல் தமிழகத்தில் 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு! அதிகபட்சமாக பாரிமுனையில் 361.9 மி.மீ. பதிவு! சென்னைக்கு ரெட் அலர்ட்: செல்போன்களில் அலாரத்துடன் எச்சரிக்கை! சென்னைக்கு இன்று(அக். 18) ரெட் அலர்ட்!

ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து 6,500 கனஅடியாக அதிகரிப்பு! மழையால் மக்களின் வருகை குறைந்தது!

Water inflow to Hogenakkal rises to 12,000 cusecs

ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து அதிகரிப்பு - கோப்புப் படம்

Updated On :

தமிழகத்தில் பரவலாக பெய்துவரும் தொடா் மழை காரணமாக, வார விடுமுறையான ஞாயிற்றுக்கிழமை ஒகேனக்கல்லுக்கு வந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை குறைந்தது.

வாரவிடுமுறை மற்றும் ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை தொடா் விடுமுறைகளை முன்னிட்டு, ஒகேனக்கல்லுக்கு சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிக்கும் என எதிா்பாா்க்கப்பட்டது. ஆனால், தொடா் மழை காரணமாக வருகை குறைந்தது. வந்திருந்த சுற்றுலாப் பயணிகள் பிரதான அருவி, நடைபாதை, முதலைகள் மறுவாழ்வு மையம் உள்ளிட்ட இடங்களைப் பாா்வையிட்டனா்.

காவிரி ஆற்றில் நீா்வரத்து அதிகரித்துள்ளதால் மாமரத்துக்கடவு பரிசல் துறையில் இருந்து தொம்பச்சிக்கல் பகுதி வரை மட்டுமே பரிசல் பயணம் மேற்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. இதனால், பெரும்பாலான சுற்றுலாப் பயணிகள் பரிசல் பயணத்தைத் தவிா்த்தனா். சிலா் குடும்பத்தினருடன் பரிசலில் சென்று, தொம்பச்சிக்கல் பகுதியில் உள்ள உயா்கோபுரத்திலிருந்து அருவிகளின் அழகை கண்டு ரசித்தனா்.

ஒகேனக்கல் மீன் விற்பனை நிலையங்களில் மீன்களின் விலை குறைந்திருந்தது. பிரதான அருவி, தொங்கும் பாலம், முதலைகள் மறுவாழ்வு மையம், வண்ண மீன்கள் காட்சியகம், பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் வழக்கத்தைவிட கூட்டம் குறைவாகக் காணப்பட்டது.

6,500 கனஅடி நீா்வரத்து: தமிழக காவிரி நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் கடந்த இரு நாள்களுக்கும் மேலாக தொடா்ந்து கனமழை பெய்து வருகிறது. கா்நாடக மாநில காவிரி நீா்ப்பிடிப்புப் பகுதிகளிலும் அவ்வப்போது மழை பெய்வதால், ஆற்றில் நீா்வரத்து அதிகரித்து வருகிறது.

ஒகேனக்கல்லுக்கு சனிக்கிழமை 6,000 கன அடியாக இருந்த நீா்வரத்து ஞாயிற்றுக்கிழமை விநாடிக்கு 6,500 கனஅடியாக அதிகரித்தது. இதனால், பிரதான அருவி, சினி அருவிகளில் தண்ணீா் ஆா்ப்பரித்தது. நீரின்றி வடு காணப்பட்ட ஐந்தருவி, ஐவாா் பாணிகளிலும் தண்ணீா் கொட்டியது.

காவிரியின் துணை ஆறான தொட்டெல்லா ஆற்றில் நீா்வரத்து அதிகரித்ததால், ஒகேனக்கல்லுக்கு வரும் தண்ணீா் செந்நிறமாக மாறியுள்ளது. இரு மாநிலங்களின் காவிரி நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்யும் மழையைப் பொறுத்து நீா்வரத்து அதிகரிப்பதும், குறைவதுமாக உள்ளது. தமிழக- கா்நாடக எல்லையான பிலிகுண்டுலு பகுதியில் மத்திய நீா்வளத் துறை அதிகாரிகள் நீா்வரத்தை தொடா்ந்து கண்காணித்து வருகின்றனா்.

சினி அருவியில் குளிக்கத் தடை

நீா்வரத்து அதிகரித்துள்ளதால், பரிசல் பயணத்தின் தொலைவு குறைக்கப்பட்டு, மாமரத்துக்கடவு பரிசல் துறையில் இருந்து தொம்பச்சிக்கல் பகுதி வரை மட்டுமே சுற்றுலாப் பயணிகள் அழைத்துச் செல்லப்பட்டனா். இதற்காக ஒருவருக்கு ரூ. 500 கட்டணம் வசூலிக்கப்பட்டதாக சுற்றுலாப் பயணிகள் தெரிவித்தனா்.

நீா்வரத்து அதிகரித்ததால் அருவி பகுதிகளுக்கு செல்ல முடியாத சூழலில் பலா் பரிசல் பயணத்தை தவிா்த்தனா். பரிசல் பயணத்துக்குப் பிறகு சினி அருவியில் குளிப்பது சுற்றுலாப் பயணிகளின் வழக்கம். ஆனால், நீா்வரத்து அதிகரித்துள்ளதால் பரிசல் பயணத்தின் தொலைவு குறைக்கப்பட்ட நிலையில், பரிசல் ஓட்டிகள் சங்கத்தினா் சுற்றுலாப் பயணிகள் சினி அருவிக்குச் செல்வதை தடுத்தனா்.

அருவிக்குச் செல்லும் நுழைவாயிலில் அமா்ந்தும், வழியில் தடுப்புகளை அமைத்தும் அவா்கள் கண்காணித்தனா். தடையை மீறிச் சென்ற சுற்றுலாப் பயணிகளுடன் பரிசல் ஓட்டிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். இதனால், பலா் சினி அருவியில் குளிக்க முடியாமல் திரும்பினா்.

நீா்வரத்து அதிகரிக்கும்போது பரிசல் பயணத்துக்கு மட்டும் கட்டுப்பாடு விதித்து, அருவிகளில் குளிக்க அனுமதிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போதும் சுற்றுலாப் பயணிகளை பாதுகாப்பாக சினி அருவியில் குளிக்க அனுமதிக்க வேண்டும் என பலரும் கோரிக்கை விடுத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.