19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய கோப்பை வெற்றி: இந்திய அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து இந்தியா சாம்பியன் பட்டம் வெல்ல காரணமாக அமைந்த ஆட்ட நாயகன் மோஹித் உல்வா! ஆசிய கோப்பை: பரபரப்பான ஆட்டத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்ற இந்தியா! உ.பி. மாநிலங்களவை எம்.பி. பதவியை ராஜிநாமா செய்த ஹர்தீப் சிங் புரி! மேக்கேதாட்டு அணை கர்நாடகத்தின் உரிமை; யார் எதிர்த்தாலும் கவலை இல்லை! டி.கே. சிவகுமார்காசோலை மோசடி வழக்கு: நடிகா் விமலின் மனு தள்ளுபடி போக்சோ வீரமணி வீட்டில் சிறுமியின் சடலம்? போலீசார் தீவிர சோதனை! ஜம்மு-காஷ்மீர், லடாக்கில் அடுத்தடுத்து 4 நிலநடுக்கங்கள் பதிவு!

உலகம் பலவிதம் - 15-11-2026

ராஜஸ்தான் மாநிலம், ஜலோர் மாவட்டத்தைச் சேர்ந்த பக்தர் ஒருவர் இதய அறுவைச் சிகிச்சை செய்து கொண்டார்.

Updated On :

காணிக்கையாக தங்க இதயம்

ராஜஸ்தான் மாநிலம், ஜலோர் மாவட்டத்தைச் சேர்ந்த பக்தர் ஒருவர் இதய அறுவைச் சிகிச்சை செய்து கொண்டார். சிகிச்சை வெற்றிகரமாக முடிந்தால், கிருஷ்ணருக்குத் தங்கத்தாலான இதயத்தை காணிக்கையாக அளிப்பதாக வேண்டிக் கொண்டார்.

சிகிச்சையில் உயிர் பிழைத்த பெயர் குறிப்பிட விரும்பாத அந்தப் பக்தர், சித்தோர்கரில் அமைந்துள்ள ஸ்ரீ சன்வாலியா சேத் (கருமை நிறத்தாலான கிருஷ்ணர்) கோயிலுக்கு நேரில் சென்று, 21 கிராம் எடையுள்ள தங்க இதயத்தை காணிக்கையாகச் செலுத்தினார். இதன் மதிப்பு ரூபாய் மூன்று லட்சத்துக்கும் அதிகமாம்.

Story image

தீப்பிடித்த லாரி டிரைவர் சமயோஜிதம்

சீனாவின் குவாங்டங் மாகாணத்தில் கழிவு அட்டைப் பெட்டிகளை ஏற்றிச் சென்ற லாரியில் திடீரெனத் தீப்பிடித்தது. பதற்றமடையாமல் ஓட்டுநர் அருகிலிருந்த தீயணைப்பு நிலையத்துக்கு லாரியை ஓட்டிச் சென்றார்.

தீயணைப்பு வீரர்கள் பல மணி நேரம் போராடி, பல்வேறு திசைகளில் இருந்து தண்ணீரைப் பீய்ச்சியடித்து தீயை அணைத்தனர். ஓட்டுநர் சமயோஜிதமாகச் செயல்பட்டதால் லாரி முழுமையாக எரிந்து போகாமல் தப்பியது. சம்பவத்தில் யாருக்கும் காயமில்லை.

Story image

அமெரிக்காவில் சீன ராட்சத பாண்டாக்கள்

அமெரிக்காவின் அட்லாண்டா நகரில் உள்ள உயிரியல் பூங்காவுக்கு சீனாவின் செங்டு நகரிலிருந்து புதிய வகை ராட்சத பாண்டாக்கள் (கருப்பு வெண்மை கலந்த உரோமத் தோலைக் கொண்ட கரடி வகை) கொண்டுவரப்பட்டுள்ளன.

ஆண் பாண்டாவுக்கு பிங் பிங் என்றும், பெண்பாண்டாவுக்கு ஃபூ ஷுவாங் என்றும் பெயர் சூட்டப்பட்டுள்ளது. ஆறு வயதான இந்த பாண்டாக்கள் மூங்கில் இலைகளை ருசித்துச் சாப்பிடும் காட்சியை ஏராளமான பார்வையாளர்கள் கண்டு ரசித்து வருகின்றனர்.

Story image

விலகிப்போனால் சொத்து வரும்

உலகின் மதிப்பு மிக்க ஏ.ஐ. நிறுவனமான 'என்விடியா' தலைமை நிர்வாக அதிகாரி சிஇஓ ஜென்சன் ஹுவாங், சீன அரசின் உளவாளியாகக் கருதப்படும் பெண்ணுடன் கள்ளத் தொடர்பு விவகார சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

1985- ஆம் ஆண்டு இவர் லோரி என்பவரைத் திருமணம் செய்துகொண்டார். ஏ.ஐ. நிறுவனத்தை ஹுவாங் தொடங்குவதற்கு 8 ஆண்டுகளுக்கு முன்பே இந்தத் திருமணம் நடைபெற்றது. ஹுவாங் சொத்து மதிப்பு ரூ.15 லட்சம் கோடி. இருவரும் விவாகரத்து செய்து கொண்டால், ஹுவாங்கின் சொத்தில் பாதியை (ரூ.7.5 லட்சம் கோடி) அவர் மனைவி பெற வாய்ப்பு இருப்பதாக சமூக வலைதளங்களில் செய்தி வெளியாகியுள்ளது.

Story image

பெண் புலியின் அஸாம் பாசம்!

புலிகள் இடமாற்றத்தின் ஒரு பகுதியாக பிகாரின் வால்மிகி புலிகள் காப்பகத்திலிருந்து மேற்கு வங்கத்தின் பக்ஸா புலிகள் காப்பகத்துக்கு ராணி என்ற பெண் புலி அக்டோபர் முதல் வாரத்தில் கொண்டு வரப்பட்டது. அடைக்கப்பட்டிருந்த இடத்திலிருந்து அக்டோபர் கடைசியில் தப்பி அசாம் சென்று விட்டது ராணி.

வனத்துறையினர் அதைக் கண்டுபிடித்து, மயக்க ஊசி செலுத்தி ஒரு வழியாக நவம்பர் முதல் வாரத்தில் பக்ஸா புலிகள் காப்பகத்துக்குக் கொண்டு வந்தனர். பெண் புலியோ அடைப்பிடத்தின் அடியில் மண்ணைத் தோண்டி, சுரங்கம் போன்ற பாதையை உருவாக்கி தப்பி, மீண்டும் அசாம் சென்றுவிட்டதாம்!

Story image

சிம்பன்சிகளுக்கு டிரோனில் உணவு

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் ஃபோர்ட் பியர்ஸில் உள்ள சிம்பன்சிகள் காப்பகத்தின் 150 ஏக்கர் பகுதிகள் அண்மையில் மழை வெள்ளத்தில் மூழ்கின.

விலங்குகள் இருப்பிடத்துக்கு நேரடியாகச் சென்று உதவி செய்யமுடியாத சூழலில், வனவிலங்குக் காப்பக ஊழியர்கள் டிரோன்களில் பழங்கள், போர்வைகளை சிம்பன்சிகளுக்கு வழங்கினர். டிரோனிலிருந்து விழுந்த வாழைப்பழத்தை கலேப் என்ற சிம்பன்சி சாப்பிடும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.