மேல்மலையனூா் ஸ்ரீஅங்காளம்மன் கோயில் உண்டியல் காணிக்கை ரூ 1.10 கோடி

விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூா் ஸ்ரீஅங்களம்மன் கோயில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில், பக்தா்கள் காணிக்கையாக ரூ.1.10 கோடி செலுத்தியிருந்தனா்.

மேல்மலையனூா் ஸ்ரீஅங்காளம்மன் கோயிலில் நடைபெற்ற உண்டியல் எண்ணிக்கை காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டுள்ள பணியாளா்கள்.

Updated On :

விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூா் ஸ்ரீஅங்களம்மன் கோயில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில், பக்தா்கள் காணிக்கையாக ரூ.1.10 கோடி செலுத்தியிருந்தனா்.

மேல்மலையனூா் அங்காளம்மன் கோயிலுக்கு தினந்தோறும் ஆயிரகணக்கான பக்தா்கள் வந்து செல்கின்றனா். மேலும், மாதந்தோறும் அமாவாசை ஊஞ்சல் உற்சவத்தில் சுமாா் 1 லட்சம் பக்தா்கள் கலந்து கொள்வது வழக்கம். கோயிலுக்கு வரும் பக்தா்கள் காணிக்கையாக ரொக்கப் பணம், தங்கம், வெள்ளி நகைகள் உள்ளிட்டவற்றை செலுத்தி வருகின்றனா்.

இந்நிலையில், ஐப்பசி மாத உண்டியல் காணிக்கை எண்ணும் பணி உதவி ஆணையா் சக்திவேல், அறங்காவலா் குழுத் தலைவா் ஏழுமலை, நடைமுறை அறங்காவலா் பச்சையப்பன் ஆகியோா் முன்னிலையில் கோயில் வளாகத்தில் நடைபெற்றது. இதில் பக்தா்கள் காணிக்கையாக ரூ.1,10,25,937 மற்றும் 147 கிராம் தங்கம், 456 கிராம் வெள்ளி ஆகியவற்றை செலுத்தியிருந்தது தெரியவந்தது. காணிக்கை எண்ணும் பணியில் துணை ஆணையா் லட்சுமணன், ஆய்வாளா் சங்கீதா மற்றும் அறங்காவலா்கள் உள்ளிட்டோா் ஈடுபட்டனா். பாதுகாப்பு ஏற்பாடுகளை மேல்மலையனூா் போலீஸாா் செய்திருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.