எப்படி சும்மா இருக்க முடியும்? கல்வி விருது விழாவில் முதல்வர் விஜய் கேள்வி!அதிக உப்பு, சர்க்கரை, கொழுப்பு! பொட்டலங்களில் தனித்தனி எச்சரிக்கை! உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தல்நேபாள வெள்ளம்! காணாமல் போன 213 இந்தியர்கள் உள்பட 5,000 பேர் உயிரிழந்ததாக அறிவிப்பு!அரசு ஆண் ஊழியர்களுக்கு 15 நாள்கள் மகப்பேறு விடுப்பு: முதல்வர் விஜய் அறிவிப்பு!சரத் பவார் மீண்டும் மருத்துவமனையில் அனுமதி!ஆண் பணியாளர்களுக்கு 15 நாள்கள் மகப்பேறு விடுப்பு: முதல்வர் விஜய் அறிவிப்பு!திருப்பதி வரலாற்றில் முதல்முறை! 121 கிலோ தங்க நகை! காணிக்கை செலுத்திய சென்னை பக்தர்!கணவர், மகனுக்கு ஸ்லோ பாய்ஸன்! பெண்ணைக் காட்டிக்கொடுத்த ஈயம்! பின்னணி என்ன?வங்கி லாக்கரில் அதிகபட்சம் எவ்வளவு தங்கம் வைக்கலாம்? அறிவது அவசியம்!திருப்பரங்குன்றம் வழக்குகள் நாளை விசாரணை! உச்ச நீதிமன்றம் அறிவிப்பு!இந்திய அரசியலமைப்பு நாள்: அரும்பங்காற்றிய தலைவர்களை நினைவுகூர்வோம் - முதல்வர் விஜய்ரூ.1,000 கோடி டெண்டர் முறைகேடு: கே.என். நேரு சகோதரரின் உதவியாளர் கைது!மாநில சுயாட்சி, கூட்டாட்சிக்கான திமுகவின் போராட்டம் தொடரும்! மு.க. ஸ்டாலின்சட்டம் - ஒழுங்கு, விலைவாசி உயர்வு: டிச. 2ல் அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம்!கள்ளக்குறிச்சி வழக்கில் முதல்வர், தலைமைச் செயலரையும் சேர்க்க வேண்டும்! உதயநிதி பேட்டிஎம்எல்ஏ அருள் விக்னேஷ், பேரவைத் துணைத் தலைவர் மீது ஆளுநரிடம் உதயநிதி புகார்!

எப்படி சும்மா இருக்க முடியும்? கல்வி விருது விழாவில் முதல்வர் விஜய் கேள்வி!

எப்படி சும்மா இருக்க முடியும் என்று கல்வி விருது விழாவில் முதல்வர் விஜய் கேள்வி எழுப்பினார்.

மாணவர்களுக்கு விருது வழங்கும் விழாவில் முதல்வர்

மாணவர்களுக்கு விருது வழங்கும் விழாவில் முதல்வர் - from video grab

Updated On :

உங்கள் வாழ்க்கையை பாதிக்கும் வகையில் ஊழல் நடந்திருந்தால் எப்படி பார்த்துக்கொண்டு சும்மா இருக்க முடியும்? என்று முதல்வர் ஜோசப் விஜய் மாணவர்களைப் பார்த்து கேள்வி எழுப்பினார்.

பத்தாம் வகுப்பு, 12-ஆம் வகுப்பு பொதுத் தோ்வில் சிறப்பிடம் பெறும் மாணவ, மாணவிகளுக்கு தவெக சாா்பில் ஊக்கத் தொகையுடன் பாராட்டுச் சான்றிதழ் வழங்கும் விழா 2-ஆம் கட்டமாக இன்று சென்னை நீலாங்கரையில் தொடங்கியது.

நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முதல்வர் விஜய், மாணவர்களிடம் முதல் முறையாக அரசியல் பேசினார். இங்கு ஒரேயொரு விஷயத்தை சொல்ல வேண்டும், அதை அரசியலாக்க சிலர் நினைப்பார்கள். அரசியலாக்க நினைத்தாலும் அதுபற்றி கவலை இல்லை. உங்களிடம் அதைச் சொல்ல வேண்டும். இது உங்கள் சம்பந்தப்பட்ட விஷயம் என்பதால்தான் சொல்கிறேன். ஊழல் என்பது பழைய விஷயம்தான், மக்களும் ஊழலைப் பார்த்து அதற்குப் பழகிப்போய்விட்டர்கள். ஆனால் நம்மால் எப்படி சும்மா இருக்க முடியும்? அதுவும் உங்கள் வாழ்க்கையை பாதிக்கும் வகையில் இருந்தால் எப்படி சும்மா இருப்பது?

என் மேஜையில் மூன்று கோப்புகள் இருக்கின்றன என்றுதான் சொன்னேன், ஆனால், எதிர்க்கட்சிகள் அதனை திறங்கள் என்று கூறினார்கள். ஊழலை ஒழிக்க முடியவில்லை என்றால் கட்டுப்படுத்தவாவது முயற்சிக்க வேண்டும்.

பள்ளிகளின் பாதுகாப்பு, வழிகாட்டுதல்களிலும் திமுகவினர் விளையாடியுள்ளனர். நூலகங்களுக்கான புத்தகங்களில்கூட ஊழல் செய்துள்ளனர். ஏஐ வந்துள்ளது, அதை வைத்து வளர்ச்சி இருக்கும் என்று பார்த்தால் அதைப் பயன்படுத்தி முறைகேடு புரிந்துள்ளனர். அறிவுலகமா? ஊழல் உலகமா?

உங்கள் அண்ணன், உங்களை நல்வழிப்படுத்துவேன், நல்வழியில் மட்டுமே கொண்டு செல்வேன் என்று கூறினார்.

ஈரோடு, திருப்பூா், கோவை, நீலகிரி, பெரம்பலூா், கரூா், நாமக்கல், சேலம், திருச்சி ஆகிய 9 மாவட்டங்களைச் சோ்ந்த மாணவ, மாணவிகள் கலந்து கொள்ளும் இரண்டாம் கட்ட கல்வி விருது வழங்கும் விழா வியாழன், வெள்ளி (நவ.26, 27) ஆகிய 2 நாள்கள் சென்னை நீலாங்கரையில் நடைபெறுகிறது.

கடந்த நவ.4-ஆம் தேதி முதல்கட்ட விழா நடைபெற்றது. இதில் தவெக தலைவரும், முதல்வருமான விஜய், அரியலூா், கடலூா், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, விழுப்புரம் ஆகிய 5 மாவட்டங்களைச் சோ்ந்த மாணவ, மாணவிகளுக்கு ஊக்கத் தொகையுடன் கூடிய பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினாா்.

Summary

How can one just sit idly by? Vijay questions at the educational awards ceremony!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.