தவெக 2 ஆம் கட்ட கல்வி விருது விழா ஒத்திவைப்பு!

தவெக 2 ஆம் கட்ட கல்வி விருது விழா ஒத்திவைக்கப்பட்டுள்ளது தொடர்பாக...

When is the TVK educational awards ceremony?

தவெக கல்வி விருது விழா - கோப்புப் படம்

Updated On :

தவெகவின் 2 ஆம் கட்ட கல்வி விருது வழங்கும் விழாவானது, நாளை (நவ. 18) நடைபெறவிருந்த நிலையில், ஒத்திவைக்கப்ப்ட்டுள்ளதாகத் தகவல் தெரியவந்துள்ளது.

2023 ஆம் ஆண்டு முதல் சட்டப்பேரவைத் தொகுதி வாரியாக 10, 12 ஆம் வகுப்புகளில் பொதுத் தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு தவெக சார்பில் ஊக்கத்தொகையுடன் கல்வி விருதும் வழங்கப்பட்டு வருகிறது.

இந்தாண்டில், 10,12 ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவர்களுக்கு விருது வழங்கும் முதல்கட்ட நிகழ்ச்சி கடந்த நவ. 4 ஆம் தேதி நடைபெற்றது.

இதில் முதல்வர் விஜய் பங்கேற்று ஊக்கத்தொகை மற்றும் விருது வழங்கி மாணவர்களை கெளரவித்தார். முதல்கட்ட விழாவில் 30 தொகுதிகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு விருது வழங்கப்பட்டது.

இதனிடையே, சென்னை நீலாங்கரையில் உள்ள ஆர்.கே. கன்வென்ஷன் மையத்தில் நாளை (நவ. 18) தவெகவின் 2 ஆம் கட்ட கல்வி விருது விழா நடைபெற இருந்தது.

இந்த நிலையில், அமைச்சர்கள் ஆனந்த், ஆதவ் அர்ஜுனா மற்றும் ராஜ்மோகன் ஆகியோர் மேக்கேதாட்டு விவகாரம் தொடர்பாக மத்திய நீர்வளத் துறை அமைச்சர் சி. ஆர். பாடீலை சந்தித்துப் பேச தில்லியில் இருக்கின்றனர்.

இதனால், நாளை நடைபெறவிருந்த தவெக 2 ஆம் கட்ட கல்வி விருதுகள் வழங்கும் விழா ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து மூன்றாம் கட்ட கல்வி விருது வழங்கும் நிகழ்வு நவ. 27 ஆம் தேதி நடைபெறவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தவெக கல்வி விருது வழங்கும் விழாவானது, ஒரு கட்டத்துக்கு 30 தொகுதிகள் வீதம் மொத்தம் 8 கட்டங்களாக நடத்த, தவெகவினர் திட்டமிட்டுள்ளனர்.

Summary

It has been reported that the second phase of the TVK’s educational awards ceremony has been postponed.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.