எப்படி சும்மா இருக்க முடியும்? கல்வி விருது விழாவில் முதல்வர் விஜய் கேள்வி!அதிக உப்பு, சர்க்கரை, கொழுப்பு! பொட்டலங்களில் தனித்தனி எச்சரிக்கை! உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தல்நேபாள வெள்ளம்! காணாமல் போன 213 இந்தியர்கள் உள்பட 5,000 பேர் உயிரிழந்ததாக அறிவிப்பு!அரசு ஆண் ஊழியர்களுக்கு 15 நாள்கள் மகப்பேறு விடுப்பு: முதல்வர் விஜய் அறிவிப்பு!சரத் பவார் மீண்டும் மருத்துவமனையில் அனுமதி!ஆண் பணியாளர்களுக்கு 15 நாள்கள் மகப்பேறு விடுப்பு: முதல்வர் விஜய் அறிவிப்பு!திருப்பதி வரலாற்றில் முதல்முறை! 121 கிலோ தங்க நகை! காணிக்கை செலுத்திய சென்னை பக்தர்!கணவர், மகனுக்கு ஸ்லோ பாய்ஸன்! பெண்ணைக் காட்டிக்கொடுத்த ஈயம்! பின்னணி என்ன?வங்கி லாக்கரில் அதிகபட்சம் எவ்வளவு தங்கம் வைக்கலாம்? அறிவது அவசியம்!திருப்பரங்குன்றம் வழக்குகள் நாளை விசாரணை! உச்ச நீதிமன்றம் அறிவிப்பு!இந்திய அரசியலமைப்பு நாள்: அரும்பங்காற்றிய தலைவர்களை நினைவுகூர்வோம் - முதல்வர் விஜய்ரூ.1,000 கோடி டெண்டர் முறைகேடு: கே.என். நேரு சகோதரரின் உதவியாளர் கைது!மாநில சுயாட்சி, கூட்டாட்சிக்கான திமுகவின் போராட்டம் தொடரும்! மு.க. ஸ்டாலின்சட்டம் - ஒழுங்கு, விலைவாசி உயர்வு: டிச. 2ல் அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம்!கள்ளக்குறிச்சி வழக்கில் முதல்வர், தலைமைச் செயலரையும் சேர்க்க வேண்டும்! உதயநிதி பேட்டிஎம்எல்ஏ அருள் விக்னேஷ், பேரவைத் துணைத் தலைவர் மீது ஆளுநரிடம் உதயநிதி புகார்!

சாம்பியன்ஸ் லீக்கில் பயர்ன் மியூனிக் அணிக்கு அதிர்ச்சி அளித்த எல்ஒஎஸ்சி!

சாம்பியன்ஸ் லீக்கில் லில் எல்ஒஎஸ்சி அணி பயர்ன் மியூனிக்கை வீழ்த்தியது குறித்து...

Lille players celebrate their victory at the Champions League opening phase soccer match between Lille and Bayern Munich in Lille, France, Wednesday, Nov. 25, 2026. (AP Photo/Jean-Francois Badias)

வெற்றிக் களிப்பில் லில் எல்ஒஎஸ்சி அணியினர் - படம்: ஏபி

Updated On :

ஐரோப்பாவில் நடைபெறும் சாம்பியன்ஸ் லீக் தொடரில் லில் எல்ஒஎஸ்சி அணி ஜெர்மனி ஜெயண்ட்ஸ் எனப்படும் பயர்ன் மியூனிக்கை வீழ்த்தி, அதிர்ச்சி அளித்தது.

வடக்கு பிரான்ஸ் அணியான லில் ஒலிம்பிக் ஸ்போர்டிங் கிளப் (லில் எல்ஓஎஸ்சி) தனது சொந்த மண்ணில் பயர்ன் மியூனிக் உடன் இன்று அதிகாலை மோதியது.

இந்தப் போட்டியில் பயர்ன் மியூனிக் நட்சத்திர வீரர்கள் இல்லாமல் களமிறங்கியது. ஆட்டத்தின் 15ஆவது நிமிஷத்தில் பயர்ன் மியூனிக் வீரர் உபமேகனோ கோல் அடித்தார். முதல் பாதியில் 1-0 என மியூனிக் முன்னிலை வகித்தது.

இரண்டாம் பாதியில் லில் அணி சார்பில் 62ஆவது நிமிஷத்தில் அயசே உயேடா கோல் அடித்து 1-1 என சமன்படுத்தினார். பின்னர், 65ஆவது நிமிஷத்தில் மியூனிக் வீரர் அலெக்சாண்டர் பவோல்விச் ஓன் கோல் அடித்தார்.

இறுதியில் லில் அணி 2-1 என்ற கோல் கணக்கில் வென்றது. இந்தப் போட்டியில் 65 சதவிகித நேரம் பந்தை தங்கள் வசம் வைத்திருந்த பயர்ன் மியூனிக் 10 ஷாட்டுகளில் 6 முறை இலக்கை நோக்கி அடித்தது.

லில் அணி 11 ஷாட்டுகளில் 3 முறை இலக்கை நோக்கி அடித்தது. 16 டேக்கள்ஸ், 29 க்ளயரன்ஸ் என தடுப்பாட்டத்தில் லில் அணி பயர்ன் மியூனிக்கைவிட சிறப்பாக விளையாடியது.

நடப்பு சாம்பியன்ஸ் லீக் சீசனில் லில் அணிக்கு இதுதான் முதல் வெற்றி என்பதும் நினைவுக்கூரத்தக்கது. புள்ளிப் பட்டியலில் இந்த அணி 29ஆவது இடத்திலும் பயர்ன் மியூனிக் அணி 15ஆவது இடத்திலும் இருக்கின்றன.

Summary

Lille LOSC stun Bayern Munich in the Champions League!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.