சாம்பியன்ஸ் லீக்: கோமோ, போர்டோ, ஆர்பி லீப்சிக், ரியல் பெட்டிஸ் வெற்றி!

சாம்பியன்ஸ் லீக் கால்பந்துத் தொடரில் இன்று நடைபெற்ற ஏழு போட்டிகள் குறித்து...

Teams that have won the Champions League

சாம்பியன்ஸ் லீக் வெற்றி பெற்ற அணிகள் - படங்கள்: எக்ஸ் / சாம்பியன்ஸ் லீக்

Updated On :

ஐரோப்பியாவில் நடைபெறும் சாம்பியன்ஸ் லீக் கால்பந்துத் தொடரில் இன்று நடைபெற்ற ஏழு போட்டிகளில் ஐந்து போட்டிகள் வெற்றியும் இரண்டு போட்டிகள் சமனிலும் முடிவடைந்தன.

இன்றை போட்டிகளில் ரியல் மாட்ரிட், கோமோ, போர்டோ, ஆர்பி லீப்சிக், ரியல் பெடிஸ் ஆகிய அணிகள் வெற்றி பெற்றன. ஆர்செனல், மான்செஸ்டர் சிட்டி அணிகளின் போட்டி சமனில் முடிவடைந்தன.

ஐரோப்பிய கண்டத்தின் மிகப்பெரிய கோப்பையான சாம்பியன்ஸ் லீக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்தத் தொடரில் அதிகமுறை கோப்பை ரியல் மாட்ரிட் அணி, பிஎஸ்வியை 5-1 என்ற கோல் கணக்கில் வென்றது.

கோமோ 1907 அணி 1-0 என்ற கோல் கணக்கில் எஇகே அணியை வீழ்த்தியது. இதில் 7ஆவது நிமிஷத்தில் பெனால்டியை கோமோ வீரர் தவறவிட்டாலும் 57ஆவது நிமிஷத்தில் லூயிஸ் மில்லா அபாரமான கோல் அடித்தார்.

போர்டோ அணி 1-0 என்ற கோல் கணக்கில் ஃபெயினூர்டு அணியை வீழ்த்தியது. இந்தப் போட்டியில் ஃபெயினூர்டு அணி வீரர் 2ஆவது நிமிஷத்தில் ஓன் கோல் அடித்து அந்த அணிக்கே ஆபத்தை விளைவித்தார்.

ரியல் பெட்டிஸ் அணி 2-0 என்ற கோல் கணக்கில் ஸ்லோவான் பிராட்டிஸ்லாவா அணியை வீழ்த்தியது. இந்தப் போட்டியில் ஹெர்னாண்டஸ் 43, 57ஆவது நிமிஷங்களில் கோல் அடித்தார்.

ஆர்பி லீப்சிக் அணி 3-1 என்ற கோல் கணக்கில் லென்ஸ் அணியை வீழ்த்தியது. இந்தப் போட்டியில் ஆர்பி லீப்சிக் சார்பாக டேவிட் ராவும் (6’), அண்டோனியா நூசா (9’, 90+4) கோல் அடிக்க, லென்ஸ் அணியில் மத்தியு உடோல் 58ஆவது நிமிஷத்தில் ஆறுதல் கோல் அடித்தார்.

ஆர்செனல், போருசியா டார்ட்மண்ட் மோதிய ஆட்டம் 1-1 என சமனில் முடிந்தது. இதேபோல மான்செஸ்டர் சிட்டி, நபோலி அணிகளின் ஆட்டம் 2-2 என சமனில் முடிவடைந்தது.

Summary

Champions League: Como, Porto, RB Leipzig, and Real Betis win!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.