முதல்வரின் அலுவல்பூர்வ இல்லமாக ‘பாமணி இல்லம்’! விஜய் ஆய்வு!அமெரிக்க இடைக்கால தேர்தல்! இறுதி முடிவுகள் வெளியாவதில் இழுபறி!விசா பிரிவுகளை 9-ஆக குறைக்க மத்திய உள்துறை அமைச்சகம் முடிவு பிரதமா் தேச துரோகி என்பதை 5 நிமிஷ விவாதத்தில் நிரூபிப்பேன்: ராகுல் காந்தி சவால் பிழைப்புக்காக வெளிமாநிலம் சென்ற தொழிலாளா்: மேற்கு வங்கம் திரும்ப முதல்வா் அழைப்பு புதிய வாக்காளா் படிவம், உறுதிமொழி படிவத்தை பிரித்து தோ்தல் ஆணையம் நடவடிக்கை ராஜஸ்தானில் தண்டவாளம் குண்டு வைத்து தகா்ப்பு: என்ஐஏ விசாரணை சா்க்கரை விலை மீண்டும் உயா்வு

சாம்பியன்ஸ் லீக் வரலாற்றில் முதல்முறை... கோமோ 1907 புதிய சாதனை!

சாம்பியன்ஸ் லீக்கின் அறிமுக சீசனிலேயே புதிய வரலாறு படைத்த கோமோ 1907 அணி குறித்து...

Como 1907 players celebrate scoring a goal

கோல் அடித்த மகிழ்ச்சியில் கோமோ 1907 அணியினர் - படம்: எக்ஸ் / கோமோ 1907

Updated On :

சாம்பியன்ஸ் லீக்கில் கோமோ 1907 முதல் அணியாக வெளியூர் மண்ணில் நடந்த போட்டியில் அதிக கோல்கள் (9) அடித்து வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது.

ஐரோப்பிய கண்டத்தில் நடைபெறும் மிகப்பெரிய கால்பந்துத் தொடரான சாம்பியன்ஸ் லீக்கில், இத்தாலி நாட்டைச் சேர்ந்த கோமோ அணி இந்த சீசனில்தான் முதல்முறையாக பங்கேற்றுள்ளது.

அறிமுக சீசனிலேயே கோமோ அணி பல சாதனைகளை நிகழ்த்தி வருகின்றது. நள்ளிரவு நடந்த போட்டியில் லென்ஸ் அணியுடன் கோமோ மோதியது.

இந்தப் போட்டியில் கோமோ 9-1 என்ற கோல் கணக்கில் அபார வெற்றியைப் பதிவு செய்தது. இதில் கோமோ அணியின் டாசோஸ் டூவிகாஸ் 7, 32, 57ஆவது நிமிஷங்களில் கோல் அடித்து ஆட்ட நாயகன் விருது வென்றார்.

நிகோ பாஸ் 2 அசிஸ்ட், ஒரு கோல் (40’) அடித்தார். குன்யா (47’), கெம்ப் (53’), லிபரேலி (62’), படூரினா (69’), பாப்பாச்சியோலி (90+2’) ஆகியோர் தலா ஒரு கோல் அடித்து வரலாற்று வெற்றிக்கு உதவினார்கள்.

சாம்பியன்ஸ் லீக் வரலாற்றிலேயே இதுதான் மிகப்பெரிய வெற்றியாக இருக்கிறது. அத்துடன் வெளியூர் மண்ணில் அதிகபட்ச கோல் அடித்த அணியாகவும் கோமோ சாதனை படைத்துள்ளது.

சமீபத்தில் ஸ்பெயினில் உயிரிழந்த ஜூசஸ் மிகைல் உருவப்படம் பதிந்த ஜெர்ஸியை தூக்கிப் பிடித்து கொண்டாடினார். 18 வயதான பாப்பாச்சியோலி சீரி ஏ போட்டியில்கூட விளையாடாமல் நேரடியாக சாம்பியன்ஸ் லீக்கில் பங்கேற்று கோல் அடித்துள்ளார்.

இந்த வெற்றியுடன் கோமோ அணி சாம்பியன்ஸ் லீக் புள்ளிப் பட்டியலில் நான்காம் இடத்துக்கு முன்னேறியுள்ளது. பிஎஸ்ஜி, ரியல் மாட்ரிட், ஆர்செனல் முதல் மூன்று இடங்களில் இருக்கின்றன.

Summary

Como becomes 1st away team to score 9 goals in a Champions League match

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.