வந்தே பாரத் ரயில்களில் விமானங்களில் வழங்குவது போன்ற உணவு அறிமுகம்! வாவ் சொல்ல வைக்குமா?ஜென்சன் ஹுவாங் சிக்கல் ஓய்ந்தது! என்விடியா மற்றொரு நிர்வாகி - சீன ஊழியருக்கு உறவு?எப்படி சும்மா இருக்க முடியும்? கல்வி விருது விழாவில் முதல்வர் விஜய் கேள்வி!அதிக உப்பு, சர்க்கரை, கொழுப்பு! பொட்டலங்களில் தனித்தனி எச்சரிக்கை! உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தல்நேபாள வெள்ளம்! காணாமல் போன 213 இந்தியர்கள் உள்பட 5,000 பேர் உயிரிழந்ததாக அறிவிப்பு!அரசு ஆண் ஊழியர்களுக்கு 15 நாள்கள் மகப்பேறு விடுப்பு: முதல்வர் விஜய் அறிவிப்பு!சரத் பவார் மீண்டும் மருத்துவமனையில் அனுமதி!ஆண் பணியாளர்களுக்கு 15 நாள்கள் மகப்பேறு விடுப்பு: முதல்வர் விஜய் அறிவிப்பு!திருப்பதி வரலாற்றில் முதல்முறை! 121 கிலோ தங்க நகை! காணிக்கை செலுத்திய சென்னை பக்தர்!கணவர், மகனுக்கு ஸ்லோ பாய்ஸன்! பெண்ணைக் காட்டிக்கொடுத்த ஈயம்! பின்னணி என்ன?வங்கி லாக்கரில் அதிகபட்சம் எவ்வளவு தங்கம் வைக்கலாம்? அறிவது அவசியம்!திருப்பரங்குன்றம் வழக்குகள் நாளை விசாரணை! உச்ச நீதிமன்றம் அறிவிப்பு!இந்திய அரசியலமைப்பு நாள்: அரும்பங்காற்றிய தலைவர்களை நினைவுகூர்வோம் - முதல்வர் விஜய்ரூ.1,000 கோடி டெண்டர் முறைகேடு: கே.என். நேரு சகோதரரின் உதவியாளர் கைது!மாநில சுயாட்சி, கூட்டாட்சிக்கான திமுகவின் போராட்டம் தொடரும்! மு.க. ஸ்டாலின்சட்டம் - ஒழுங்கு, விலைவாசி உயர்வு: டிச. 2ல் அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம்!கள்ளக்குறிச்சி வழக்கில் முதல்வர், தலைமைச் செயலரையும் சேர்க்க வேண்டும்! உதயநிதி பேட்டிஎம்எல்ஏ அருள் விக்னேஷ், பேரவைத் துணைத் தலைவர் மீது ஆளுநரிடம் உதயநிதி புகார்!

வந்தே பாரத் ரயில்களில் விமானங்களில் வழங்குவது போன்ற உணவு அறிமுகம்! வாவ் சொல்ல வைக்குமா?

வந்தே பாரத் ரயில்களில் விமானங்களில் வழங்குவது போன்ற உணவு அறிமுகம் செய்யப்படுகின்றன.

Vande Bharat train

வந்தே பாரத் ரயில் - கோப்புப் படம்

Updated On :

நாட்டில் இயக்கப்படும் படுக்கை வசதி கொண்ட மூன்று வந்தே பாரத் ரயில்களில், விமானங்களில் வழங்குவது போன்ற உணவுகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

நீண்ட தொலைவு பயணிக்கும் ரயில்களில், குறைந்த வகையான உணவுகள், நல்ல தரத்துடன் வழங்குவது என்ற இலக்கை நோக்கி இந்திய ரயில்வே பயணித்து வருகிறது.

அந்த வகையில், படுக்கை வசதிகொண்ட மூன்று வந்தே பாரத் ரயில்களிலும் காலை உணவு, மதிய உணவு, இரவு உணவுகளில் வழங்கப்படும் உணவு வகைகளைக் குறைத்திருக்கிறது.

மேலும் விமானங்களில் வழங்கப்படும் உணவுகளைப் போல கச்சிதமான உணவு வகைகளை வழங்க திட்டமிட்டுள்ளது. இதனை படுக்கை வசதி கொண்ட வந்தே பாரத் ரயில்களில் முதல் முறையாக அறிமுகம் செய்திருக்கிறது.

மும்பை - பெங்களூர், ஹௌரா - காமாக்யா, புது தில்லி - வாரணாசி நகரங்களுக்கு இடையே இயக்கப்படும் மூன்று வந்தே பாரத் ரயில்களிலும், தற்போது இருக்கும் உணவு வழங்குநர் அல்லது கிளவுட் சமையல் கூடங்களில் தயாரிக்கப்படாமல், மிகப்பெரிய உணவு தயாரிப்பு நிறுவனங்களிடம் விடப்படவிருக்கிறது.

இது குறித்து விமானங்களில் உணவு வழங்கும் நிறுவனங்களிடமும் பேசப்பட்டுள்ளதாம்.

அதன்படி, காலை உணவாக இட்லி-வடை அல்லது உப்புமா வழங்கப்படும். மதியம் மற்றும் இரவுக்கு சப்பாத்தி, சாப்பாடு, பருப்பு மற்றும் இணை உணவு, அதாவது கோழிக்கறி அல்லது காய்கறி போன்றவை வழங்கப்படும். மொத்த உணவின் எடை 700 - 750 கிராமிலிருந்து 450 - 500 கிராமாகக் குறைக்கப்பட்டது.

இதன் மூலம், பயணிகளிடமிருந்து வரும் புகார்கள் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு முன்பு, சூப், ஆம்லெட், சான்ட்விச், மோர், சாக்லேட், தயிர், சாலட், இனிப்புகள் என பல வகையான உணவுகளை மெனுவில் வைத்திருந்தது.

Summary

Vande Bharat trains to introduce food service similar to that on flights! Will it leave passengers saying "wow"?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.