7/7 வெற்றி: பிரீமியர் லீக்கில் 129 ஆண்டுகளுக்குப் பிறகு சாதனை படைத்த மான்செஸ்டர் சிட்டி!
பிரீமியர் லீக்கில் மான்செஸ்டர் சிட்டியின் தொடர் வெற்றிகள் குறித்து...

எர்லிங் ஹாலண்ட், சிட்டி அணியின் பயிற்சியாளர் - படங்கள்: எக்ஸ் / பிரீமியர் லீக், மான்செஸ்டர் சிட்டி
இங்கிலாந்தில் நடைபெறும் பிரீமியர் லீக் கால்பந்துத் தொடரில் மான்செஸ்டர் சிட்டி 3-2 என்ற கோல் கணக்கில் இப்ஸ்விச் சிட்டியை வீழ்த்தியது.
இந்த வெற்றியுடன்பிரீமியர் லீக் நடப்பு சீசனில் அனைத்து போட்டிகளில் தொடர்ச்சியாக வெற்றிகளைக் குவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மான்செஸ்டர் சிட்டி தனது சொந்த மண்ணில் இப்ஸ்விச் சிட்டி உடன் மோதியது. இந்தப் போட்டியில் சிட்டி அணியின் பில் ஃபோடன் 19ஆவது நிமிஷத்தில் கோல் அடித்தார்.
அடுத்து இப்ஸ்விச் அணி சார்பில் 21ஆவது நிமிஷத்தில் கோல் அடிக்கப்பட்டு 1-1 என சமன்படுத்தப்பட்டது. எர்லிங் ஹாலண்ட் 34, 69ஆவது நிமிஷங்களில் கோல் அடித்து அசத்தினார்.
90ஆவது நிமிஷத்தில் பெனால்டி வாய்ப்பில் ஜியான் பிளெமிங் கோல் அடித்து இப்ஸ்விச் அணிக்கு ஆறுதல் அளித்தார். இறுதியில் சிட்டி அணி 3-2 என்ற கோல் கணக்கில் வென்றது.
இத்துடன் நடப்பு சீசன் பிரீமியர் லீக்கில் 7 வெற்றிகள் பெற்று முதலிடத்தில் நீடிக்கிறது. 129 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த சாதனையை நிகழ்த்திய முதல் மான்செஸ்டர் சிட்டி பயிற்சியாளராக என்ஸோ மரேஸ்கா இருக்கிறார்.
சமீபத்தில் சாம்பியன்ஸ் லீக்கில் பிஎஸ்ஜி உடன் தோல்வியுற்ற சிட்டி அணி பிரீமியர் லீக்கில் தனது ஆதிக்கத்தை நிலைநாட்டி வருகிறது.
Seven matches. Seven wins. ð®âð¨ð©µ
— Manchester City (@ManCity) October 17, 2026
A record-breaking @premierleague start for our boss! 𤩠pic.twitter.com/UKvIqXsPmr
Summary
Haaland two Goals, Manchester City F.C. won against Ipswich Town F.C. in Premier League match
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


