கடைசி நிமிஷ கோல்: காலிறுதிக்கு முன்னேறிய நார்வே..! எம்பாபே சாதனையை முறியடித்த ஹாலண்ட்!
நார்வே கால்பந்து வீரர் எர்லிங் ஹாலண்ட் நிகழ்த்திய சாதனை குறித்து...

எம்பாபே, எர்லிங் ஹாலண்ட் - படங்கள்: எக்ஸ் / எம்பாபே, எர்லிங் ஹாலண்ட்
நார்வே கால்பந்து வீரர் எர்லிங் ஹாலண்ட் குறைவான போட்டிகளில் அதிக கோல்கள் அடித்து, எம்பாபேவின் சாதனையை முறியடித்துள்ளார்.
ஐரோப்பிய கண்டத்தில் நடைபெறும் நேஷன்ஸ் லீக் ஆட்டத்தில் நார்வே - டென்மார்க் அணிகள் இன்று அதிகாலையில் மோதின. இந்தப் போட்டியில் நார்வே 3-2 என கடைசி நிமிஷத்தில் த்ரில் வெற்றி பெற்றது.
இந்தப் போட்டியில் டென்மார்க் 11, 14ஆவது நிமிஷங்களில் கோல் அடித்து 2-0 என முன்னிலை வகித்தது. அடுத்ததாக 37ஆவது நிமிஷத்தில் எர்லிங் ஹாலண்ட் கோல் அடித்தார்.
பின்னர், இரண்டாம் பாதியில் நார்வேவின் மார்டின் ஒடேகார்ட் 83ஆவது நிமிஷத்தில் கோல் அடித்து 2-2 என சமன்படுத்தினார். ஸ்டாப்பேஜ் டைம் நேரத்தில் 90+6ஆவது நிமிஷத்தில் பெனால்டியில் எர்லிங் ஹாலண்ட் கோல் அடித்து வெற்றி பெற வைத்தார்.
இந்த வெற்றியின் மூலமாக நேஷன்ஸ் லீக்கில் நார்வே அணி காலிறுதிக்குத் தகுதி பெற்றுள்ளது. இத்துடன் எர்லிங் ஹாலண்ட் மிகக் குறைவான போட்டிகளில் கிளியன் எம்பாபேவை முந்தி சாதனை படைத்துள்ளார்.
எர்லிங் ஹாலண்ட் 61 போட்டிகளில் 68 கோல்கள் அடித்துள்ளார். எம்பாபே 108 போட்டிகளில் 67 கோல்கள் அடித்துள்ளார். 47 போட்டிகள் குறைவாகவே இந்த சாதனையை படைத்துள்ளார்.
ð¨JUST IN: Erling Haaland PASSES Kylian Mbappe in the international goalscoring charts⦠Haaland has 68 in just 61 games⦠Mbappe has 67 in 108. pic.twitter.com/cmxDJ0vu8d
— Polymarket FC (@PolymarketFC) November 17, 2026
Summary
Erling Haaland sends Norway to Nations League quarters on last-minute penalty and broke mbappe record
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


