டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 7 காசுகள் உயர்ந்து ரூ. 93.44 ஆக நிறைவு!
ரூபாய் மதிப்பு 7 காசுகள் உயர்ந்து ரூ. 93.44 என்ற நிலையில் நிலைபெற்றது.

இந்திய ரூபாய் | கோப்புப் படம்
புதுதில்லி: டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு ஆரம்பகட்ட ஏற்றத்தில் இருந்து சற்று குறைந்தபோதிலும், வர்த்தகத்தின் முடிவில் 7 காசுகள் உயர்ந்து ரூ. 93.44 என்ற நிலையில் நிலைபெற்றது.
உள்நாட்டுப் பங்குச் சந்தைகளில் ஏற்பட்ட சரிவு மற்றும் டாலரின் வலுவான மதிப்பு ஆகியவை ரூபாயின் ஏற்றத்திற்குத் தடையாக இருந்தன. இருப்பினும், ரூபாய் மதிப்பு உயர்வுடன் முடிவடைந்தது.
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே அதிகரித்துள்ள பதற்றங்கள் காரணமாக உலகச் சந்தைகளில் முதலீட்டாளர்கள் மத்தியில் நிச்சயமற்ற சூழல் நிலவியது. முதலீட்டாளர்கள் ரிஸ்க் எடுக்கத் தயங்கியதால், டாலரின் மதிப்பு வலுவடைந்தது. இதன் காரணமாக, காலையில் ஏற்றம் கண்ட இந்திய ரூபாய் பிறகான வர்த்தகத்தில் அதன் மதிப்பை இழந்ததாக வர்த்தகர்கள் தெரிவித்தனர்.
வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலாவணி சந்தையில், ரூபாய் மதிப்பு 93.47 என்ற அளவில் தொடங்கி, அதிகபட்சமாக ரூ. 93.25 ஆகவும் குறைந்தபட்சமாக ரூ. 93.57 என்ற நிலையை எட்டியது. வர்த்தக முடிவில், அதன் முதல் நாள் முடிவிலிருந்து 7 காசுகள் உயர்ந்து ரூ. 93.44 ஆக நிலைபெற்றது.
Summary
The rupee settled for the day higher by 7 paise at 93.44 on Wednesday.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

