தமிழ்நாட்டில் நாளை கனமழை பெய்யாது! மஞ்சள் எச்சரிக்கை வாபஸ்!அரக்கோணம் அரசு மருத்துவமனை உள்ளிட்ட நலத் திட்டங்களைத் தொடக்கி வைத்தார் முதல்வர் விஜய்பொங்கல் ரிடர்ன்! முடிந்தது ரயில் டிக்கெட் முன்பதிவு!உலக பாரம்பரிய வாரம்: மாமல்லபுரத்தில் நாளை (நவ. 19) இலவச அனுமதி!ஜம்மு - காஷ்மீர் மசூதிக்குள் பதுங்கியிருந்த லஷ்கர்-இ-தொய்பா தளபதி என்கவுன்டர்!வ.உ.சி.யின் கொள்கைகளைப் பின்பற்றி முன்னேற்றத்திற்குப் பாடுபடுவோம்! முதல்வர் விஜய்!செம்மஞ்சேரியில் ஒலிம்பிக் சிட்டி அமைக்க டெண்டர் வெளியீடு!தீவிரப் புயலாக வலுப்பெற்றது அக்வான்!ஜம்மு-காஷ்மீரில் மோதல்! லஷ்கர்-இ-தொய்பா தளபதியை சுற்றிவளைத்த இந்திய ராணுவம்!தமிழக சட்டப்பேரவை குளிா்கால கூட்டத் தொடருக்கு வாய்ப்பில்லை? ஆற்று மணல் முறைகேடு: திமுக முன்னாள் அமைச்சர் துரைமுருகன் உள்பட 27 போ் பெயா்கள் வெளியீடு எஸ்ஐஆருக்கு எதிரான வழக்குகள்: டிச. 9-இல் உச்சநீதிமன்றம் விசாரணை பிரதமா் மோடி தலைமையில் இன்று மத்திய அமைச்சா்கள் கூட்டம்

அரசு மருத்துவமனை கட்டடங்கள் உள்ளிட்ட நலத் திட்டங்களைத் தொடக்கி வைத்தார் முதல்வர் விஜய்

அரக்கோணம் உள்ளிட்ட பல்வேறு அரசு மருத்துவமனைகளுக்கு புதிய கட்டடங்கள் உள்ளிட்ட நலத் திட்டங்களைத் தொடக்கி வைத்தார் முதல்வர் விஜய்

Updated On :

தமிழ்நாட்டில், அரக்கோணம், சத்தியமங்கலம், ஸ்ரீபெரும்புதூர் உள்ளிட்ட பகுதிகளில் புதிதாகக் கட்டப்பட்ட அரசு மருத்துவமனைக் கட்டடங்களை முதல்வர் ஜோசப் விஜய் இன்று காணொலி வாயிலாகத் திறந்து வைத்தார்.

மேலும், பல நிறைவடைந்த திட்டங்களையும் தொடக்கிவைத்து, புதிய திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டினார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், காணொலி காட்சி வாயிலாக, நகராட்சி நிர்வாகம் சார்பில் ரூ.174 கோடியில் நிறைவேற்றப்பட்ட 12 திட்டப் பணிகளையும், ரூ.11.15 கோடியில் பசுமை வழித்தடம் அமைப்பதறக்ன 2 திட்டப் பணிகளையும் முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்.

அரக்கோணம் மருத்துவமனை கட்டடம்

மத்திய அரசின் பிஎம் ஏபிஹெச்ஐஎம் திட்டம் 2021-22 முதல் 2025-26 வரையிலான காலகட்டத்தில் நாடு முழுவதும் சுகாதாரக் கட்டமைப்பை மேம்படுத்தும் நோக்கில் செய்லபடுத்தப்பட்ட திட்டமாகும். மாவட்டங்களில் தீவிர சிகிச்சைப்பிரிவுகள், ஒருங்கிணைந்த பொது சுகாதார ஆய்வகங்கள் மற்றும் சுகாதார நிலையங்களின் கட்டமைப்புகளை மேம்படுத்துவது இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.

அரக்கோணம், நெமிலி வட்ட மக்கள் இந்த மருத்துவமனையையே நம்பியுள்ளனா். இதுவரை உயா்சிகிச்சைக்காக வேலூா், சென்னை, திருவள்ளூா் உள்ளிட்ட தொலைதூர மருத்துவமனைகளுக்கு செல்ல வேண்டிய நிலை பல நோயாளிகளுக்கு ஏற்பட்டது.

புதிய கட்டடம் திறக்கப்பட்டுள்ளதால் தீவிர சிகிச்சைப்பிரிவு செயல்பாட்டுக்கு வருவதன் மூலம் அவசர சிகிச்சை தேவைப்படும் மக்களுக்கு உள்ளூரிலேயே மேம்பட்ட மருத்துவ வசதிகள் கிடைக்க இது உதவும். குறிப்பாக விபத்து மற்றும் அவசர சிகிச்சை நேரங்களில் இந்த கட்டடம் முக்கிய பங்காற்றும் என மக்கள் எதிா்பாா்க்கின்றனா்.

ரூ.25 கோடியில் 50 படுக்கைகள் கொண்ட பல்நோக்கு தீவிர சிகிச்சைப் பிரிவு கட்டடம் மற்றும் மருத்துவ உபகரணங்களுடன் சிகிச்சை அளிப்பதற்கான கட்டமைப்பு உருவாகியுள்ளது.

குறிப்பாக அவசர மருத்துவ சிகிச்சை பெறுவோருக்கு மேம்பட்ட வசதிகள், விபத்துகளில் காயமடைந்தவா்களுக்கு தீவிர சிகிச்சை அளிப்பதற்கான வாய்ப்பு, உயிருக்கு ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்படும் நோயாளிகளுக்கான சிகிச்சை வசதிகள், நவீன மருத்துவ கட்டமைப்புடன் கூடிய 50 படுக்கைகள் கொண்ட சிகிச்சைப்பிரிவு ஆகியவை இக்கட்டட திறப்பின் மூலம் மக்களுக்கு கிடைக்கப்பெறும்.

இன்று காலை 11 மணிக்கு சென்னையில் இருந்தபடி தமிழக முதல்வா்ஜோசப் விஜய் காணொலி மூலம் திறந்து வைத்துள்ளார். கூட்டுறவுத்துறை அமைச்சா் வ.காந்திராஜ், ஆட்சியா் பிரியா ரவிச்சந்திரன் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் உயா் அலுவலா்கள், மாவட்ட அலுவலா்கள் பங்கேற்றுள்ளனர்.

Summary

Chief Minister Vijay inaugurated welfare projects, including the Arakkonam Government Hospital.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

FOLLOW US

ON GOOGLE DISCOVER