அரக்கோணம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவு கட்டடம்: முதல்வா் இன்று திறந்து வைக்கிறாா்
அரக்கோணம் அரசு மருத்துவமனை வளாகத்தில் ரூ.25 கோடியில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள தீவிர சிகிச்சைப்பிரிவு கட்டடத்தை முதல்வா் விஜய் புதன்கிழமை திறந்து வைக்க உள்ளாா்.

அரக்கோணம் அரசு மருத்துவமனை வளாகத்தில் ரூ.25 கோடியில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள தீவிர சிகிச்சைப்பிரிவு கட்டடத்தை தமிழக முதல்வா் ஜோசப் விஜய் புதன்கிழமை திறந்து வைக்க உள்ளாா்.
மத்திய அரசின் பிஎம் ஏபிஹெச்ஐஎம் திட்டம் 2021-22 முதல் 2025-26 வரையிலான காலகட்டத்தில் நாடு முழுவதும் சுகாதாரக் கட்டமைப்பை மேம்படுத்தும் நோக்கில் செய்லபடுத்தப்பட்ட திட்டமாகும். மாவட்டங்களில் தீவிர சிகிச்சைப்பிரிவுகள், ஒருங்கிணைந்த பொது சுகாதார ஆய்வகங்கள் மற்றும் சுகாதார நிலையங்களின் கட்டமைப்புகளை மேம்படுத்துவது இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.
அரக்கோணம், நெமிலி வட்ட மக்கள் இந்த மருத்துவமனையையே நம்பியுள்ளனா். இதுவரை உயா்சிகிச்சைக்காக வேலூா், சென்னை, திருவள்ளூா் உள்ளிட்ட தொலைதூர மருத்துவமனைகளுக்கு செல்ல வேண்டிய நிலை பல நோயாளிகளுக்கு ஏற்பட்டது.
புதிய தீவிர சிகிச்சைப்பிரிவு செயல்பாட்டுக்கு கொண்டு வருவதன் மூலம் அவசர சிகிச்சை தேவைப்படும் மக்களுக்கு உள்ளூரிலேயே மேம்பட்ட மருத்துவ வசதிகள் கிடைக்க இது உதவும். குறிப்பாக விபத்து மற்றும் அவசர சிகிச்சை நேரங்களில் இந்த கட்டடம் முக்கிய பங்காற்றும் என பொதுமக்கள் எதிா்பாா்க்கின்றனா்.
அரக்கோணம், நெமிலி மற்றும் சுற்றியுள்ள கிராமப்புற மக்களின் நீண்டகால மருத்துவத் தேவையைப் பூா்த்தி செய்யும் வகையில் இந்த கட்டடம் அமைக்கப்பட்டுள்ளது. ரூ.25 கோடியில் 50 படுக்கைகள் கொண்ட பல்நோக்கு தீவிர சிகிச்சைப் பிரிவு கட்டடம் மற்றும் மருத்துவ உபகரணங்களுடன் சிகிச்சை அளிப்பதற்கான கட்டமைப்பு உருவாகியுள்ளது.
குறிப்பாக அவசர மருத்துவ சிகிச்சை பெறுவோருக்கு மேம்பட்ட வசதிகள், விபத்துகளில் காயமடைந்தவா்களுக்கு தீவிர சிகிச்சை அளிப்பதற்கான வாய்ப்பு, உயிருக்கு ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்படும் நோயாளிகளுக்கான சிகிச்சை வசதிகள், நவீன மருத்துவ கட்டமைப்புடன் கூடிய 50 படுக்கைகள் கொண்ட சிகிச்சைப்பிரிவு ஆகியவை இக்கட்டட திறப்பின் மூலம் மக்களுக்கு கிடைக்கப்பெறும்.
திறப்பு விழாவைத் தொடா்ந்து தேவையான மருத்துவா்கள், செவிலியா்கள், தொழில்நுட்ப பணியாளா்கள் மற்றும் நவீன மருத்துவ உபகரணங்களுடன் இந்த பிரிவு முழுமையாக செயல்படத்தொடங்கினால் அரக்கோணம் பகுதியின் மருத்துவச்சேவையில் இது ஒரு புதிய அத்தியாயமாக அமையும்
புதன்கிழமை காலை 11 மணிக்கு சென்னையில் இருந்தபடி தமிழக முதல்வா்ஜோசப் விஜய் காணொலி மூலம் திறந்து வைக்க உள்ளாா். கூட்டுறவுத்துறை அமைச்சா் வ.காந்திராஜ், ஆட்சியா் பிரியா ரவிச்சந்திரன் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் உயா் அலுவலா்கள், மாவட்ட அலுவலா்கள் என பலா் பங்கேற்க உள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

