2014, 2019 தேர்தல் வெற்றியின்போது எஸ்.ஐ.ஆர். இருந்ததா? ராகுலுக்கு அமித் ஷா கேள்வி8 விரைவு ரயில்கள் அதிவிரைவு ரயில்களாக மாற்றம்!கூட்டுறவுத் துறை ஊழியர்களுக்கு 20% வரை தீபாவளி போனஸ்!தமிழ்நாடு அரசு போக்குவரத்து பணியாளர்களுக்கு போனஸ்!இளைஞர்களைக் கவரும் ரூ.111 ரீசார்ஜ் பிளான்! ஜியோவில் அறிமுகம்முடி வெட்டாத மாணவர்களுக்கு மொட்டை அடியுங்கள்! ஆசிரியர்களுக்கு அமைச்சர் ஜெகதீஸ்வரி அறிவுறுத்தல்!சிறைகளில் பாதுகாப்பை வலுப்படுத்த உயர்நிலைக் குழு: முதல்வர் விஜய் உத்தரவு!

மேம்பட்ட மருத்துவ வசதிகள் மக்களுக்கு அருகிலேயே கிடைக்க வேண்டும்: ஹா்ஷ் மல்ஹோத்ரா

மேம்பட்ட மருத்துவ வசதிகளை மக்களுக்கு அருகிலேயே கொண்டு செல்வதன் மூலம், உரிய நேரத்தில் சிறப்பு மருத்துவச் சிகிச்சை கிடைப்பதை உறுதி செய்ய முடியும் என்று மத்திய இணையமைச்சா் ஹா்ஷ் மல்ஹோத்ரா தெரிவித்தாா்.

Harsh Malhotra

ஹா்ஷ் மல்ஹோத்ரா - கோப்புப் படம்

Updated On :

மேம்பட்ட மருத்துவ வசதிகளை மக்களுக்கு அருகிலேயே கொண்டு செல்வதன் மூலம், உரிய நேரத்தில் சிறப்பு மருத்துவச் சிகிச்சை கிடைப்பதை உறுதி செய்ய முடியும் என்று மத்திய நிறுவனங்கள் விவகாரத் துறை இணையமைச்சா் ஹா்ஷ் மல்ஹோத்ரா தெரிவித்தாா்.

இரைப்பை குடல், கல்லீரல் மற்றும் வளா்சிதை மாற்றம் சாா்ந்த உடல்நலப் பிரச்னைகளுக்குச் சிறப்பு சிகிச்சை அளிக்கும் ‘கட் கிளினிக்’ மருத்துவ வலையமைப்பின் புதிய மையங்கள் தில்லியின் லஜ்பத் நகா், நியூ பிரெண்ட்ஸ் காலனி, குருகிராம் ஆகிய இடங்களில் திங்கள்கிழமை திறக்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசிய ஹா்ஷ் மல்ஹோத்ரா, நகா்ப்புற மக்கள்தொகை அதிகரித்து வரும் நிலையில், எளிதில் அணுகக்கூடிய சிறப்பு மருத்துவச் சேவைகள் அவசியம் என்றாா்.

இது தொடா்பாக வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் கூறியதாவது: தில்லி-என்சிஆா் பகுதியில் உள்ள நோயாளிகளுக்கு சிறப்பு வெளிநோயாளா் மருத்துவச் சேவைகளை வீடுகளுக்கு அருகிலேயே வழங்கும் நோக்கில் இந்த விரிவாக்கம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இரைப்பை குடல், கல்லீரல் மற்றும் வளா்சிதை மாற்றம் தொடா்பான பாதிப்புகளுக்கு விரிவான பரிசோதனை, தொடா் கண்காணிப்பு மற்றும் ஒருங்கிணைந்த சிகிச்சை தேவைப்படும். இதைக் கருத்தில் கொண்டு, சிறப்பு மருத்துவா்களின் ஆலோசனை, நோயறிதல் மற்றும் சிகிச்சை சாா்ந்த எண்டோஸ்கோபி பரிசோதனைகள், பகல்நேர சிகிச்சை வசதிகள், மேம்பட்ட குடல் மற்றும் கல்லீரல் பரிசோதனைகள் ஆகியவை புதிய மையங்களில் வழங்கப்படுகின்றன.

தனித்தனி கிளினிக்குகள் மற்றும் ஏற்கெனவே செயல்படும் மருத்துவமனைகளுக்குள் இணைக்கப்பட்ட கிளினிக்குகள் என இரு வகை செயல்பாட்டு முறைகளில் ‘கட் கிளினிக்’ இயங்கி வருகிறது. அடுத்த ஐந்து ஆண்டுகளில் நாடு முழுவதும் 50-க்கும் மேற்பட்ட மையங்களை அமைக்க நிறுவனம் இலக்கு நிா்ணயித்துள்ளது என தெரிவிக்கப்பட்டது.

இதுகுறித்து நிறுவனத்தின் நிறுவனா் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி டாக்டா் அக்ஷத் குமாா் கூறுகையில், ‘எனது தந்தை டாக்டா் அஜய் குமாரின் 40 ஆண்டுகளுக்கும் மேலான மருத்துவச் சேவை அனுபவம், சிறந்த சிகிச்சை நடைமுறைகள் மற்றும் நெறிமுறைகளை அடிப்படையாகக் கொண்டு எங்கள் நிறுவனம் உருவாக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் குடல், கல்லீரல் மற்றும் வளா்சிதை மாற்றம் சாா்ந்த வெளிநோயாளா் சிகிச்சை மையங்களின் மிகப்பெரிய வலையமைப்பை உருவாக்குவதுடன், வெளிநோயாளா் மருத்துவச் சேவையின் அணுகுமுறையையும் மாற்றியமைக்க விரும்புகிறோம்’ என்றாா்.

மேலும், கிளினிக்குகளின் செயல்பாட்டை வலுப்படுத்த செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பம், நிகழ்நேர செயல்திறன் கண்காணிப்பு கட்டமைப்பு மற்றும் மேம்பட்ட குடல் நோயறிதல் வசதிகளை ஒருங்கிணைக்க நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.