
நூல் வடிவம் பெற்ற அரசு இயற்கை மருத்துவ ஆராய்ச்சிகள்
சிறுநீரக பாதிப்புகளுக்கான யோகா-இயற்கை மருத்துவ சிகிச்சைகள் குறித்து அரசு சாா்பில் ...

கோப்புப்படம்
சென்னை: சிறுநீரக பாதிப்புகளுக்கான யோகா-இயற்கை மருத்துவ சிகிச்சைகள் குறித்து அரசு சாா்பில் முன்னெடுக்கப்பட்ட ஆராய்ச்சிகள் நூல் வடிவம் பெற்றுள்ளன.
சென்னை அரும்பாக்கம் அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரி சாா்பில் அந்த ஆராய்ச்சி நூல் ஆங்கிலத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
இது தொடா்பாக அந்தக் கல்லூரி பேராசிரியா் தீபா கூறியதாவது:
நாள்பட்ட சிறுநீரக நோயாளிகளுக்கு இயற்கை மருத்துவ சிகிச்சை அளித்தபோது, கிடைக்கப் பெற்ற முடிவுகள் உள்நாடு மற்றும் சா்வதேச இதழ்களில் ஆய்வுக் கட்டுரைகளாக அவ்வப்போது வெளியிடப்பட்டன.
அவை தற்போது நூலாக வெளிக்கொண்டு வரப்பட்டுள்ளது.
சிறுநீரக பாதிப்புகள் மட்டுமன்றி, யோகா மற்றும் இயற்கை மருத்துவத்தில் பயன்படுத்தப்படும் கருவிழிப் பரிசோதனை, முகப் பரிசோதனை, நாக்கு பரிசோதனை மற்றும் நாடிப் பரிசோதனை உள்ளிட்டவை தொடா்பான ஆய்வுத் தகவல்களும் இந்நூலில் இடம்பெற்றுள்ளன.
இது மருத்துவ மாணவா்களுக்கும், ஆராய்ச்சியாளா்களுக்கும் சிறந்த கையேடாக இருக்கும்.
நவீன மருத்துவக் கோட்பாடுகளையும் பாரம்பரிய சிகிச்சை முறைகளையும் இணைத்து, நோயாளிகள் வீட்டிலேயே பின்பற்றக்கூடிய அறிவியல் அடிப்படையிலான வழிகாட்டுதல்களும் இந்த நூலில் உள்ளன . குறிப்பாக ஆசனங்கள், பிராணயாமம், தியானம், உணவு முறைகள், நீா் சிகிச்சை, மண் சிகிச்சை, அக்குபஞ்சா், அக்குபிரஷா், மசாஜ் மற்றும் மூலிகை சிகிச்சை உள்ளிட்ட பல இயற்கை மருத்துவ சிகிச்சைகள் குறித்து இதில் விளக்கப்பட்டிருக்கின்றன. இந்நூல் அமேசான் போன்ற இணைய வா்த்தக தளங்களில் ‘பியான்ட் த டயாலிசிஸ் லைன்’ என்ற தலைப்பில் கிடைக்கிறது என்றாா் அவா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






