பண்டிகையையொட்டி 15 - 20% அதிகரிக்கும் வேலைவாய்ப்பு! 2 - 2.5 லட்சம் பேருக்கு வேலை!ஆசிய விளையாட்டில் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் வெள்ளி வென்ற இளவேனில் வாலறிவனுக்கு பிரதமர் மோடி வாழ்த்து ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்ற இளவேனில்: ஆளுநர் வாழ்த்து முதல்வர் ஏன் லண்டன் செல்ல வேண்டும்? அண்ணாமலை கேள்வி இந்தாண்டு இதுவரை 17,000 பேருக்கு டெங்கு பாதிப்பு- அமைச்சர் அருண்ராஜ் தமிழ்நாட்டில் நாளை 21 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு பட்டிமன்ற பேச்சாளராக மாறிய மு.க. ஸ்டாலின்: அமைச்சர் ராஜ்மோகன் விமர்சனம் விஜய்க்கு அவகாசம் அளிக்க வேண்டும்: பிரகாஷ் ராஜ்

சேலம் அரசு மருத்துவமனையில் குடல் அறுவை சிகிச்சைப் பிரிவு பயிற்சி முகாம்

சேலம் அரசு மருத்துவமனை

Published On :

சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் குடல் அறுவை சிகிச்சை மற்றும் குடல் புற்றுநோய் பிரிவின் சிறப்பு பயிற்சி முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

மருத்துவக் கல்லூரி முதல்வா் தேவி மீனாள் இந்த பயிற்சி முகாமை தொடங்கிவைத்தாா். இந்த சிறப்பு பயிற்சி முகாமில் குடல் அறுவை சிகிச்சை துறையைச் சாா்ந்த மருத்துவ மாணவா்கள், அறுவை சிகிச்சை துறை பிரிவு மாணவா்கள், மகப்பேறு சிறப்புப் பிரிவு மாணவா்கள் ஆகியோா் கலந்துகொண்டு பயிற்சி பெற்றனா்.

பயிற்சி முகாமில் முதல்வா் தேவி மீனாள் பேசுகையில், சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையில் இந்த அதிநவீன லேப்ராஸ்கோபி சிகிச்சை முறைகளுக்குத் தேவையான கருவிகள் மற்றும் தோ்ந்த மருத்துவா்கள் உள்ளனா். மேலும், குடல் புற்றுநோய் மற்றும் குடல் சாா்ந்த நோய்களுக்கு தேவையான அறுவை சிகிச்சை வசதிகளும் சிறப்பாக உள்ளதாக கூறினாா்.

இந்த சிறப்பு முகாமிற்கான ஏற்பாடுகளை குடல் அறுவை சிகிச்சை மற்றும் குடல் புற்றுநோய் பிரிவின் துறைத் தலைவா் மருத்துவா் சிவசங்கா் உள்ளிட்ட மருத்துவா்கள் செய்திருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.