பொங்கல் ரிடர்ன்! முடிந்தது ரயில் டிக்கெட் முன்பதிவு!
பொங்கல் பண்டிகை முடிந்து சென்னை திரும்புவதற்கான ரயில் முன்பதிவு டிக்கெட் முடிந்தது பற்றி...

வந்தே பாரத் ரயில் - கோப்புப் படம்
பொங்கல் பண்டிகை முடிந்து சென்னை திரும்புவதற்கான முன்பதிவு டிக்கெட்கள் பெரும்பாலான ரயில்களில் சில நிமிஷங்களிலேயே விற்றுத்தீர்ந்தன.
அடுத்தாண்டு (2027) ஜன.15-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) பொங்கல் பண்டிகை கொண்டாடப்படவிருக்கிறது. ஜன. 14-ஆம் தேதி போகி, 16-ஆம் தேதி மாட்டுப்பொங்கல், 17-ஆம் தேதி காணும் பொங்கல் ஆகிய பண்டிகைகளும் அடுத்தடுத்து கொண்டாடப்படுகின்றன.
பொங்கல் பண்டிகையையொட்டி, சென்னையில் பணியாற்றும் வெளிமாவட்டங்களைச் சேர்ந்த அரசு மற்றும் தனியார் ஊழியர்கள் தங்களது சொந்த ஊர்களுக்குச் செல்ல வசதியாக ரயில்களில் 60 நாள்கள் முன்னே டிக்கெட் முன்பதிவு செய்யலாம்.
அதன்படி, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னையிலிருந்து வெளியூருக்குச் செல்வதற்கான ரயில் முன்பதிவு டிக்கெட்டுகள் ஏற்கெனவே முடிவடைந்துவிட்டன.
இந்த நிலையில், பொங்கல் பண்டிகையின் கடைசி நாளான காணும் பொங்கல் நாளான ஜன. 17 ஆம் தேதிக்கான (ஞாயிற்றுக்கிழமை) ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்கின.
ஜன. 18 திங்கள்கிழமை அன்று அலுவலகங்கள், பள்ளிகள் திறக்கப்படும் என்பதால், பெரும்பாலானோர் ஜன. 17 அன்று சென்னை திரும்புவதற்கு திட்டமிட்டு இன்று காலை ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்தனர்.
மதுரை, திருநெல்வேலி, செங்கோட்டை, கன்னியாகுமரி, திருச்சி, தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு இயக்கப்படும் பாண்டியன், நெல்லை, பொதிகை, முத்துநகர் விரைவு ரயில்கள், கோவை, சேலம் உள்ளிட்ட மேற்கு மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு இயக்கப்படும் சேரன், நீலகிரி, மங்களூரு உள்ளிட்ட விரைவு ரயில்கள் டிக்கெட்டுகளை அனைத்து சில நிமிஷங்களிலேயே விற்றுத்தீர்ந்தன.
தமிழ்நாடு முழுவதும் இயக்கப்படும் வந்தே பாரத், தேஜஸ், சதாப்தி உள்ளிட்ட ப்ரீமியம் ரயில்களுக்கான டிக்கெட்டுகளும் முழுமையாக விற்றுத்தீர்ந்தன.
பலரயில்களுக்கான முன்பதிவில் ரெக்ரெட் வந்ததால் பலரும் ஏமாற்றமடைந்தனர்.
மேலும், ஜன. 18 திங்கள்கிழமைக்கான முன்பதிவு நாளையும் (நவ. 19), ஜன. 19 செவ்வாய்க்கிழமைக்கான முன்பதிவு நாளை மறுநாளும் (நவ. 20) காலை 8 மணிக்கு தொடங்கவுள்ளது.
Summary
Returning after Pongal! Train ticket bookings have closed!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


