சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை மீண்டும் சம்மன்நாட்டைக் கட்டமைப்பதில் பழங்குடியின சமூகம் ஈடு இணையற்ற பங்களிப்பு: பிரதமர் மோடிகாற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்ற புயல் சின்னம்!இந்தியா - நியூசி. கடைசி ஒருநாள்: சொற்ப ரன்களில் ஆட்டமிழந்த ரோஹித், கோலி!கந்த சஷ்டி விழா: காலை முதலே முருகன் கோயில்களில் குவிந்த பக்தர்கள்!நியூசிலாந்துக்கு எதிரான 5வது ஒருநாள்: இந்திய அணி பேட்டிங்!முதல்வா் விஜய் நாளை தில்லி பயணம்! பிரதமா் மோடி, சோனியாவை சந்திக்கிறாா்!இந்தியாவில் எஸ்சிஓ கூட்டம்: பாகிஸ்தான் பங்கேற்பதாக அறிவிப்பு! நேபாளம் - அயோத்தி இடையே புதிய வாராந்திர ரயில் சேவை! ரயில்வே வாரியம் ஒப்புதல்!சென்னை உயா்நீதிமன்றத்தின் அனைத்து வாயில்களும் இன்றிரவு 8 மணி வரை மூடப்படும்! தமிழகம் முழுவதும் நடைபாதை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்! அரசுக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு!டாஸ்மாக் முறைகேடு வழக்கு: தொழிலதிபா் ரத்தீஷுக்கு ‘ரெட் காா்னா்’ நோட்டீஸ்!லஞ்ச பணம் பறிமுதல் விவகாரம்: உள்ளாட்சித் துறை அதிகாரிகள் 23 போ் மீது வழக்குப் பதிவு

பொங்கல் பண்டிகை: சில நிமிஷங்களிலேயே விற்றுத் தீர்ந்த ரயில் டிக்கெட்கள்!

பொங்கல் பண்டிகையொட்டி, தொடங்கிய சில நிமிஷங்களிலேயே ரயில் டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்ததைப் பற்றி...

ஓணம் பண்டிகை

சிறப்பு ரயில். - கோப்புப் படம்

Updated On :

பொங்​கல் பண்​டிகையை முன்​னிட்டு பாண்டியன், வைகை உள்ளிட்ட பெரும்​பாலான விரைவு ரயில்​களில் முன்பதிவு டிக்கெட்கள் சில நிமிஷங்​களி​லேயே விற்றுத்தீர்ந்​தன.

அடுத்தாண்டு (2027) ஜன.15-ஆம் தேதி (வெள்​ளிக்​கிழமை) பொங்கல் பண்​டிகை கொண்​டாடப்​படவிருக்கிறது. ஜன. 14-ஆம் தேதி போகி, 16-ஆம் தேதி மாட்​டுப்​பொங்​கல், 17-ஆம் தேதி காணும் பொங்​கல் ஆகிய பண்​டிகைகளும் அடுத்தடுத்து உள்ளன.

பொங்கல் பண்டிகையையொட்டி, சென்னையில் பணியாற்றும் வெளிமாவட்டங்களைச் சேர்ந்த அரசு மற்றும் தனியார் ஊழியர்கள் தங்களது சொந்த ஊர்​களுக்குச் செல்ல வசதியாக ரயில்​களில் 60 நாள்​கள் முன்​னே டிக்கெட் முன்பதிவு செய்யலாம்.

அதன்​படி, ஜன.14-ஆம் தேதி சென்னையிலிருந்து தங்கள் சொந்த ஊர்களுக்குப் புறப்​பட டிக்​கெட் முன்​ப​திவு ஞாயிற்றுக்கிழமை (நவ. 15) காலை 8 மணிக்கு ஐஆர்​சிடிசி இணை​யதளம் வழியாகவும், ரயில் நிலையங்​களில் வரிசையில் நின்று பயணிகள் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்தனர்.

ரயில் டிக்கெட் முன்பதிவுக்கான ஐஆர்சிடிசி இணையதளம் வழக்கம் போல முடங்கிய நிலையில், சிறிது நேரத்தில் டிக்கெட்டுகள் விற்றுத்தீர்ந்தன.

சென்​னை​யில் இருந்து மதுரை, திருநெல்​வேலி, செங்​கோட்டை, கன்​னியாகுமரி, தூத்​துக்​குடி ஆகிய ஊர்​களுக்கு புறப்​படும் பாண்டியன், நெல்லை, பொதிகை, முத்​துநகர் விரைவு ரயில்களின் 2-ஆம் வகுப்பு தூங்​கும் வசதி பெட்​டிகளிலும், வந்தே பாரத், வைகை விரைவு ரயிலில் 2-ஆம் சிட்டிங், சிசி உள்ளிட்ட இருக்கைகளுக்கான டிக்கெட்டுகள் 5 நிமிஷங்களுக்குள் விற்றுத்தீர்ந்தன. சில ரயில்களுக்கான முன்பதிவில் ரெக்ரெட் வந்ததால் பலரும் வருத்தத்துக்குள்ளாகினர்.

Summary

In anticipation of the Pongal festival, reserved tickets for most express trains—including the Pandian and Vaigai expresses—sold out within just a few minutes.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.