தோ்தல் வழக்கை நிராகரிக்கக் கோரிய உதயநிதி ஸ்டாலின் மனு: இன்று தீா்ப்புஅரசுப் பள்ளிகளில் இன்று குழந்தைகள் தின கொண்டாட்டம்: மாணவா்களுக்கு கேக் வழங்குகிறாா் முதல்வா் விஜய்இந்தியாவின் ரஷிய எரிபொருள் இறக்குமதி: அக்டோபரில் ரூ.67,000 கோடியாக அதிகரிப்புபிகாரிலிருந்து சென்னைக்கு நவ. 17-இல் சிறப்பு ரயில்நவ.19-க்கு பிறகு வங்கக் கடலில் புயல் உருவாக வாய்ப்புதைவானை முந்திய இந்தியப் பங்குச் சந்தை: ரூ.508 லட்சம் கோடி மதிப்புடன் உலக அளவில் 5-ஆவது இடம்

பொங்கல் திருநாள்! 15 நிமிடங்களிலேயே விற்றுத் தீர்ந்த தென்மாவட்ட ரயில் டிக்கெட்டுகள்!

பொங்கல் திருநாளுக்கான ரயில் டிக்கெட்டுகள் முன்பதிவு குறித்து...

IRCTC

பொங்கல் திருநாள்: 15 நிமிடங்களிலேயே விற்றுத் தீர்ந்த தென்மாவட்ட ரயில் டிக்கெட்டுகள்! - பிரதிப் படம்

Updated On :

அடுத்தாண்டு பொங்கல் திருநாளுக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று (நவ. 13) தொடங்கியது.

ஆண்டுதோறும் பொங்கல் திருநாளுக்கு வெளியூரில் பணிபுரிவோர் சொந்த ஊர்களுக்குச் செல்வது வழக்கம். அதிலும் குறிப்பாக நீண்ட தூர பயணத்திற்கு பெரும்பாலானோர் ரயில் போக்குவரத்தையே நம்பியிருக்கிறார்கள். அப்படி ரயில் பயணம் செய்வதற்கு 60 நாள்களுக்கு முன்பே டிக்கெட் முன்பதிவு செய்ய முடியும்.

இந்த ஆண்டு ஜனவரி 14 ஆம் தேதியில் போகி பண்டிகையும், 15-இல் பொங்கல் திருநாளும் கொண்டாடப்படவிருக்கிறது.

கூட்ட நெரிசலைத் தவிர்ப்பதற்காக சிலர் பொங்கல் திருநாளுக்கு ஓரிரு நாள்களுக்கு முன்பாகவே ரயில் டிக்கெட் முன்பதிவு செய்வர். இதன்படி, ஜன. 12 ஆம் தேதிக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று காலை 8 மணிக்குத் தொடங்கியது.

இந்த நிலையில், முன்பதிவு தொடங்கிய 15 நிமிடங்களிலேயே தென் மாவட்டங்களுக்குச் செல்லும் ரயில்களின் டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்தன.

மேலும், ஜன. 13-ஆம் தேதி (புதன்) பயணம் செய்ய விரும்புவோர் நவ.14 சனிக்கிழமையும், ஜன 14ஆம் தேதி (வியாழன்) பயணம் செய்ய விரும்புவோர் நவ. 15ஆம் தேதி ஞாயிறன்றும் டிக்கெட் முன்பதிவு செய்யலாம்.

Summary

Pongal Festival: Train tickets for southern districts sold out within 15 minutes

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.