சென்னையில் ஒரே நாளில் 36 ரெளடிகள் கைது!மாவட்ட ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்தி: தவெக எம்எல்ஏ மீது கடும் நடவடிக்கை தேவை! ஜோதிமணிகுரூப் 4 தேர்வுக்கு 14.89 லட்சம் பேர் விண்ணப்பம்! நாளை வரை திருத்தங்கள் மேற்கொள்ளலாம்!சபரிமலை பக்தர்களுக்காக சென்னை - கொல்லம் சிறப்பு ரயில் அறிவிப்பு!மூன்றாவது மனைவியையும் விவாகரத்து செய்தார் பவன் கல்யாண்!தவெக எம்எல்ஏக்களுடன் முதல்வர் விஜய் நாளை ஆலோசனை!

பொங்கல் ரயில் டிக்கெட் முன்பதிவு! தொடங்குவது எப்போது? முழு விவரம்

பொங்கல் ரயில் டிக்கெட் முன்பதிவு தொடங்குவது எப்போது என்பது பற்றிய முழு விவரம்

16-10-26 - TN -Chennai - Commuters wait for their respective trains at Central on Friday in Chennai - Express / P Jawahar

பொங்கல் ரயில் டிக்கெட் முன்பதிவு - ENS

Updated On :

அதற்குள் தீபாவளிப் பண்டிகை முடிந்துவிட்டதே என்று சோகத்தோடு ஊரிலிருந்து சென்னை உள்ளிட்ட நகரங்களுக்கு திரும்பியவர்களுக்கு அடுத்த கொண்டாட்டமான செய்திதான் இது.

பொங்கல் பண்டிகை ஜனவரி மாதம் கொண்டாடப்படவிருக்கும் நிலையில், அதற்கான ரயில் டிக்கெட் முன்பதிவு விரைவில் தொடங்குகிறது.

பொங்கல் பண்டிகைக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு நவம்பர் 13ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) தொடங்கப்பட உள்ளது.

ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகைக்கு வெளியூரில் பணி செய்வோர் சொந்த ஊர்களுக்குச் செல்வது வழக்கம். அதிலும் குறிப்பாக நீண்ட தூரப் பயணத்திற்கு பெரும்பாலானோர் ரயில் போக்குவரத்தையே நம்பியிருக்கிறார்கள். அப்படி ரயில் பயணம் செய்வதற்கு 60 நாள்களுக்கு முன்பே டிக்கெட் முன்பதிவு செய்ய முடியும்.

அடுத்தாண்டு ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகைக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு இன்னும் ஒரு சில நாள்களில் தொடங்கப்பட உள்ளது. இந்த ஆண்டு பொங்கல் பண்டிகை ஜனவரி 15ஆம் தேதி வெள்ளிக்கிழமை கொண்டாடப்படவிருக்கிறது. 14ஆம் தேதி போகிப் பண்டிகை.

எனவே, ஜன. 13-ஆம் தேதி (புதன்) பயணம் செய்ய விரும்புவோர் நவ.14 சனிக்கிழமையும், ஜன 14ஆம் தேதி (வியாழன்) பயணம் செய்ய விரும்புவோர் நவ. 15ஆம் தேதி ஞாயிறன்றும் டிக்கெட் முன்பதிவு செய்ய வேண்டும்.

இந்த ஆண்டு தீபாவளிப் பண்டிகை ஞாயிறன்று வந்தது போல, அடுத்தாண்டு ஜனவரி மாதம் 17ஆம் தேதி காணும் பொங்கல் வருகிறது.

ஜனவரி 18ஆம் தேதி ஊர் திரும்ப வேண்டும் என்றால் நவ. 19ஆம் தேதியும், ஜன. 19ஆம் தேதி ரயிலுக்கு நவ.20ஆம் தேதியும் டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ள வேண்டும் என்று தெரிய வந்துள்ளது.

ஐஆர்சிடிசி இணையதளம் அல்லது செயலிகள் வழியாகவோ அல்லது நேரில் டிக்கெட் கவுன்டர்களிலோ முன்பதிவு செய்யலாம்.

Summary

Pongal Train Ticket Booking! When Does It Start? Full Details

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.