ராமாயணா - அதிகரிக்கும் டிக்கெட் விற்பனைகள்!
ராமாயணா திரைப்படத்தின் டிக்கெட் விற்பனைகள் குறித்து...

நடிகர் யஷ்
ராமாயணா திரைப்படத்திற்கான டிக்கெட் விற்பனைகள் அதிகரித்து வருகின்றன.
நிதிஷ் திவாரி இயக்கத்தில் தீபாவளி வெளியீடாகத் திரைக்கு வந்த ராமாயணா திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. முதல் பாகத்தில் ராவணனான நடிகர் யஷ் சீதையான சாய் பல்லவியைக் கடத்திக்கொண்டு போவதுடன் நிறைவடைந்துள்ளது.
இப்படத்தில் இடம்பெற்ற விஎஃப்எக்ஸ் காட்சிகள், சண்டைக்காட்சிகளின் பிரம்மாண்டம் ஆகியவை ரசிகர்களின் ரசனைக்குத் தீனியாக அமைந்துள்ளதாகப் பலரும் கருத்துகளைக் கூறி வருகின்றனர். முக்கியமாக, ஐமேக்ஸ் திரை அனுபவம் அபாரமாக இருந்ததையும் குறிப்பிடுகின்றனர்.
இந்த நிலையில், ராமாயணா திரைப்படத்திற்கான டிக்கெட் முன்பதிவுகள் முதல் நாளை விட அதிகமாக விற்பனையாகி வருகின்றன.
ஒரு மணி நேரத்தில் இந்தியா முழுவதும் 1 லட்சம் டிக்கெட்கள் ஆன்லைன் வாயிலாக விற்பனையாகியுள்ளது. இதனால், ராமாயணா திரைப்படத்தின் வசூலும் இந்த வார இறுதிக்குள் ரூ. 1000 கோடியைத் தாண்டலாம் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
Ticket sales for the Ramayana film are on the rise.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

