மேகமலை வழக்கு! ஓய்வுபெற்ற நீதிபதி பி.ஆர். கவாய் தலைமையில் குழு!அன்பில் மகேஸின் நீதிமன்றக் காவல் நவ. 18 வரை நீட்டிப்பு!பெரியார் அறிவுலகத்துக்கு புத்தகங்கள் வாங்கியதில் ஊழல்! விசாரணை தொடக்கம்!மாமல்லபுரம் அருகே அரசுப் பேருந்து மீது வேன் மோதல்! இருவர் பலி, 8 பேர் கவலைக்கிடம்!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,960 குறைந்தது! வெள்ளி விலையும் சரிவு! (நவ. 6)

உங்களை நினைத்து பெருமையாக இருக்கிறது ரன்பீர்... ஆலியா பட் நெகிழ்ச்சி!

நடிகை ஆலியா பட் ராமாயணா திரைப்படம், கணவர் ரன்பீர் குறித்து கூறியிருப்பதாவது...

Ranbir with their daughter, Raha Kapoor, Alia Bhatt

மகளுடன் ரன்பீர் கபூர், ஆலியா பட் - படங்கள்: இன்ஸ்டா/ ஆலியா பட்

Updated On :

நடிகை ஆலியா பட் ராமாயணா திரைப்படம் குறித்தும் அதில் அவரது கணவர் ரன்பீர் கபூரின் நடிப்பு குறித்தும் நெகிழ்ச்சியாகப் பதிவிட்டுள்ளார்.

நிதீஷ் திவாரி இயக்கத்தில் ரன்பீர் கபூர், யஷ், சாய் பல்லவி, காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள்.

இந்தப் படத்தை சோனி பிக்சர்ஸ் நேற்று (அக்.10) உலகம் முழுவதும் வெளியிட்டது. முதல் நாளில் மட்டுமே இந்தப் படம் ரூ.125 கோடி வசூலித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தப் படத்தில் ரன்பீர் கபூர் கடவுள் ராமராக நடித்துள்ளார். இது குறித்து ரன்பீரின் மனைவியும் நடிகையுமான ஆலியா பட் தனது இன்ஸ்டா பக்கத்தில் மகள் ராஹாவுடன் இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்து கூறியிருப்பதாவது:

நீங்கள் இதற்காக உங்கள் முழு உழைப்பையும், ஆன்மாவையும் கொடுத்துள்ளீர்கள். எப்படியாகினும் இன்னும் எவ்வளவோ அவளுக்காக கைவிட்டுள்ளீர்கள். அதனால், உங்களை நினைத்து பெருமையாக இருக்கிறது ரன்பீர்.

இந்தப் படத்தின் அற்புதமான அனுபவதுக்காக தங்களது ஆன்மாவையும் உழைப்பையும் அளித்துள்ள ஒவ்வொருவருக்கும் எனது வாழ்த்துகள். சில கதைகள் நாம் எல்லாரையும் விட மிகப்பெரியது. அதில் ராமாயணாவும் ஒன்று எனக் கூறியுள்ளார்.

முதல் புகைப்படத்தில் ராமாராக இருக்கும் ரன்பீர் அவரது மகள் ராஹாவுக்கு முத்தமிடுவது போலவும் அடுத்த புகைப்படத்தில் அருகில் இருக்குமாறும் படப்பிடிப்பு புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

நமீத் மல்ஹோத்ராவின் பிரைம் ஃபோகஸ் ஸ்டூடியோஸ் உடன் டிஎன்இஜி மற்றும் யஷ்ஹின் மான்ஸ்டர் மைண்ட் கிரியேஷன்ஸ் இணைந்து இந்தப் படம் தயாராகியுள்ளது.

Summary

Some stories are bigger than all of us: actor Alia Bhatt on Ranbir's 'Ramayana'

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.