பொங்கல் திருநாள்! ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று தொடங்குகிறது!
பொங்கல் திருநாளுக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று தொடங்குவது குறித்து...

பொங்கல் திருநாளுக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு - பிரதிப் படம்
பொங்கல் திருநாள் ஜனவரி மாதம் கொண்டாடப்படவிருக்கும் நிலையில், அதற்கான ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று (நவ. 13) தொடங்குகிறது.
ஆண்டுதோறும் பொங்கல் திருநாளுக்கு வெளியூரில் பணிபுரிவோர் சொந்த ஊர்களுக்குச் செல்வது வழக்கம். அதிலும் குறிப்பாக நீண்ட தூர பயணத்திற்கு பெரும்பாலானோர் ரயில் போக்குவரத்தையே நம்பியிருக்கிறார்கள். அப்படி ரயில் பயணம் செய்வதற்கு 60 நாள்களுக்கு முன்பே டிக்கெட் முன்பதிவு செய்ய முடியும்.
அடுத்தாண்டு ஜனவரி மாதம் பொங்கல் திருநாளுக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று முதல் தொடங்குகிறது. இந்த ஆண்டு பொங்கல் திருநாள் ஜனவரி 15ஆம் தேதி வெள்ளிக்கிழமை கொண்டாடப்படவிருக்கிறது. 14ஆம் தேதி போகிப் பண்டிகை.
எனவே, ஜன. 13-ஆம் தேதி (புதன்) பயணம் செய்ய விரும்புவோர் நவ.14 சனிக்கிழமையும், ஜன 14ஆம் தேதி (வியாழன்) பயணம் செய்ய விரும்புவோர் நவ. 15ஆம் தேதி ஞாயிறன்றும் டிக்கெட் முன்பதிவு செய்ய வேண்டும். கூட்ட நெரிசலைத் தவிர்ப்பதற்காக சிலர் பொங்கல் திருநாளுக்கு ஓரிரு நாள்களுக்கு முன்பாகவே ரயில் டிக்கெட் முன்பதிவு செய்வர். இதன்படி, போகி பண்டிகைக்கு முன்னதாகவே ஜன. 12-ல் செல்ல விரும்புவோர் இன்று (நவ. 13) முன்பதிவு செய்யலாம்.
ஐஆர்சிடிசி இணையதளம், செயலிகள் வழியாகவோ நேரில் டிக்கெட் கவுன்டர்களிலோ காலை 8 மணி முதல் முன்பதிவு செய்யலாம்.
இதேபோல், ஜனவரி 18ஆம் தேதி ஊர் திரும்ப வேண்டும் என்றால் நவ. 19ஆம் தேதியும், ஜன. 19ஆம் தேதி ரயிலுக்கு நவ.20ஆம் தேதியும் டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ள வேண்டும் என்று தெரிய வந்துள்ளது.
Summary
Train ticket bookings for the Pongal festival begin today
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


