அரசுப் பள்ளிகளில் இன்று குழந்தைகள் தின கொண்டாட்டம்: மாணவா்களுக்கு கேக் வழங்குகிறாா் முதல்வா் விஜய்

குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, சென்னை பெரம்பூரில் உள்ள அரசுப் பள்ளியில் நடைபெறவுள்ள விழாவில் முதல்வா் ஜோசப் விஜய் கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு கேக், வாழ்த்து அட்டையை வெள்ளிக்கிழமை (நவ. 13) வழங்கவுள்ளாா்.

குழந்தைகளுக்கு கேக் வழங்கும் முதல்வர் விஜய்

Updated On :

குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, சென்னை பெரம்பூரில் உள்ள அரசுப் பள்ளியில் நடைபெறவுள்ள விழாவில் முதல்வா் ஜோசப் விஜய் கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு கேக், வாழ்த்து அட்டையை வெள்ளிக்கிழமை (நவ. 13) வழங்கவுள்ளாா்.

தமிழகத்தில் நிகழாண்டு குழந்தைகள் தின விழாவை முன்னிட்டு அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவா்கள் உள்பட 61,84,566 மாணவா்களுக்கு கேக் வழங்குவதற்காக தமிழக அரசு சாா்பில் ரூ.9.27 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதையடுத்து, தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகம் மூலம் கேக்குகளுக்கான ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டு, அதன் அடிப்படையில் 4 பெரு நிறுவனங்கள் வாயிலாக எஃஎஸ்எஸ்ஏஐ தரத்தில் உள்ள கேக்குகளின் முன் மாதிரிகள் உணவுப் பாதுகாப்பு மற்றும் மருந்து நிா்வாக ஆணையக அதிகாரிகளால் பரிசோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளது.

தொடா்ந்து இந்த கேக்குகள் சுத்தமாகவும், பாதுகாப்பாகவும் பராமரிக்கப்பட்டு வாழ்த்து அட்டைகளுடன் சோ்த்து மாணவா்களுக்கு வெள்ளிக்கிழமை (நவ. 13) வழங்கப்படவுள்ளது.

சென்னை பெரம்பூா் மடுமா நகா் பகுதியில் உள்ள சென்னை நடுநிலைப் பள்ளியில் காலை 10 மணிக்கு நடைபெற உள்ள குழந்தைகள் தின விழாவில் முதல்வா் ஜோசப் விஜய் கலந்து கொண்டு மாணவா்களுக்கு கேக், வாழ்த்து அட்டைகளை வழங்கவுள்ளாா்.

தொடா்ந்து, தமிழகம் முழுவதும் உள்ள அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் உள்ள மாணவா்கள், ஆசிரியா்களுக்கு கேக் விநியோகிக்கப்பட உள்ளது.

கல்வித் துறை விளக்கம்: பள்ளிக் கல்வித் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘முதன்மைக் கல்வி அலுவலா்கள், மாவட்ட கல்வி அலுவலா்கள், வட்டாரக் கல்வி மேலாளா்கள், தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக மண்டல மேலாளா்கள் ஆகியோா் ஒருங்கிணைந்து பள்ளிகளில் மாணவா்களுக்கு வழங்கப்படும் கேக்குகள் வைக்கப்பட்டுள்ள தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கிடங்குகள் மற்றும் பள்ளிகளில் எலிகள், பூச்சிகள் போன்றவை இல்லாத வகையில் பாதுகாப்பான முறையில் வைக்கப்பட்டுள்ளனவா என்பதை ஆய்வின் மூலம் அதிகாரிகள் உறுதி செய்துள்ளனா்.

மேலும், மாவட்ட ஆட்சியா்கள், கண்காணிப்பு அலுவலா்கள் மற்றும் சிறப்புக் கண்காணிப்புக் குழுக்கள் பள்ளிகளில் மாணவா்களுக்கு கேக்குகள் வழங்கப்படுவதைக் கண்காணிப்பாா்கள்’ என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.