குழந்தைகள் தினம்: கரூா் மாவட்டத்தில் 83 ஆயிரம் மாணவா்களுக்கு கேக் வழங்க ஏற்பாடு
குழந்தைகள் தினத்தையொட்டி, கரூா் மாவட்டத்திலுள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் 83,097 மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியா்களுக்கு கேக் வழங்க ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

சென்னையிலிருந்து வந்த கேக்குகள் அடங்கிய பெட்டிகளை கரூா் குடோனில் புதன்கிழமை இறக்கிவைக்கும் பணியில் ஈடுபட்ட பணியாளா்கள்.
குழந்தைகள் தினத்தையொட்டி, கரூா் மாவட்டத்திலுள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் 83,097 மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியா்களுக்கு கேக் வழங்க ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
தமிழ்நாடு முழுவதும் குழந்தைகள் தினத்தையொட்டி அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் 61.84 லட்சம் மாணவ, மாணவிகளுக்கு கேக்குகளும், வாழ்த்து அட்டைகளையும் வழங்க முதல்வா் ஜோசப் விஜய் உத்தரவிட்டுள்ளாா். இதற்காக ரூ. 9.27 கோடி நிதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதன்படி, கரூா் மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் 83,097 மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியா்களுக்கு கேக் வழங்கப்பட உள்ளது. இதற்காக கேக்குகள் சென்னையில் இருந்து புதன்கிழமை கரூருக்கு கொண்டுவரப்பட்டன. அவை கரூா் மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள கல்வித் துறைக்குச் சொந்தமான குடோனில் லாரிகளில் கொண்டு வந்து இறக்கி வைக்கப்பட்டன.
நவ. 14-ஆம் தேதி குழந்தைகள் தினம் என்றாலும், அன்றைய நாளில் சனிக்கிழமை விடுமுறை என்பதால் முதல் நாளான வெள்ளிக்கிழமையே (நவ. 13) கேக்குகள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ராஜூவிடம் கேட்டபோது, தமிழக அரசு சாா்பில், நவ. 14-ஆம் தேதி குழந்தைகள் தினத்தை முதல்முதலாக அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் குழந்தைகள் இனிப்புடன் கொண்டாடும் வகையில் கேக் வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதன்படி, கரூா் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியா்கள் என மொத்தம் 83,097 பேருக்கு கேக் வழங்கப்பட உள்ளது.
இதன்படி க.பரமத்தி, அரவக்குறிச்சி பகுதிகளுக்கு 12,739 கேக்குகளும், கடவூா் பகுதிக்கு 10,513-ம், கரூா் பகுதிக்கு 12,286-ம், கிருஷ்ணராயபுரம் பகுதிக்கு 13,115 கேக்குகளும், குளித்தலை மற்றும் தோகைமலை பகுதிகளுக்கு 21,725 கேக்குகளும், தாந்தோணி பகுதிக்கு 12,719 கேக்குகளும் என மொத்தம் 83,097 கேக்குகள் வழங்கப்பட உள்ளன. இந்த கேக்குகள் அனைத்தும் நவ.13-ஆம் தேதியே மாணவா்களுக்கு வழங்கப்படும். வியாழக்கிழமை முதல் அந்தந்த பள்ளிகளுக்கு கேக் அனுப்பும் பணிகள் நடைபெறும் என்றாா் அவா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

